மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

600 பணியாளர்களை நீக்கியது விப்ரோ நிறுவனம்!

600 பணியாளர்களை நீக்கியது விப்ரோ நிறுவனம்!

இந்தியாவின் 3வது பெரிய மென்பொருள் நிறுவனமான விப்ரோ 600 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் விப்ரோ, கடந்த டிசம்பர் மாதம் 1.79 லட்சம் பணியாளர்களைக் கொண்டிருந்தது. தற்போது 600 பணியாளர்களை நீக்கியுள்ளது. நீக்கப்பட்ட பணியாளர்கள் குறித்து எந்தக் கருத்தையும் அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை. இந்த எண்ணிக்கை 2000 வரை அதிகரிக்கக்கூடும் என யூகிக்கப்படுகிறது.

இதுகுறித்து விப்ரோ நிறுவனம், ‘கடுமையான செயலாக்க மதிப்பீட்டு முறையான அறிவுரை அளித்தல், மறு பயிற்சி மற்றும் பணியாளர்கள் திறனை உயர்த்துதல் போன்றவற்றை கடைப்பிடித்து வருகிறோம். அதன்படி வர்த்தக நோக்கங்கள், வாடிக்கையாளர்கள் தேவைகள் மற்றும் நிறுவனத்தின் அதிமுக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் பணியாளர்களை வரைமுறைப்படுத்துகிறது. இதனால் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் வேறுபடும்’ எனத் தெரிவித்துள்ளது.

விப்ரோவின் 4வது காலாண்டு மற்றும் முழுவருட பணியாளர்கள் எண்ணிக்கை குறித்து வரும் 25ஆம் தேதி அறிக்கை வெளியிடப்படும்.

457 விசா நடைமுறை மாற்றத்தால் டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட இந்திய ஐ.டி. நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர் பணியிடங்களுக்கு பொறியாளர்களை அனுப்புவதில் நிச்சயமற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்திய ஐ.டி. நிறுவனங்கள், கிட்டத்தட்ட 60% வருவாயை வடஅமெரிக்கச் சந்தையிலும் 20% வருவாயை ஐரோப்பியச் சந்தையிலும் மீதமுள்ள வருவாயை பிற நாடுகளிலிருந்தும் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon