மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

முதலமைச்சர் கனவு பலிக்காது: அன்வர் ராஜா

முதலமைச்சர் கனவு பலிக்காது: அன்வர் ராஜா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் இரண்டாகப் பிரிந்த அதிமுக அணிகள் மீண்டும் இணைய முயற்சி செய்து வருகின்றன. இரு அணிகளும் பேச்சுவார்த்தைக்குக் குழு அமைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அணியினர் வியாழக்கிழமை (நேற்று) கட்சியில் இருந்து சசிகலாவை நிரந்தரமாக நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை முன்வைத்தனர். இதையடுத்து பேச்சுவார்த்தையில் அடுத்தகட்ட நகர்வுகள் எடுக்க தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை (நேற்று) செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக அம்மா அணியில் உள்ள அன்வர் ராஜா எம்.பி. கூறியதாவது, “பன்னீர்செல்வம் முதலமைச்சராக வர இனி வாய்ப்பே இல்லை. அவருடைய முதலமைச்சர் கனவு இனி பலிக்காது” என்று தெரிவித்துள்ளார். மேலும், “122 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் பழனிசாமி முதலமைச்சராக இருக்கும்போது புதிய முதலமைச்சர் பற்றிய பேச்சுக்கே இடமில்லை. பழனிசாமியே தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருப்பார்” என்று தெரிவித்தார்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon