மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

சிவகார்த்தியின் ‘வேலைக்காரன்’ ஸ்பெஷல்!

சிவகார்த்தியின் ‘வேலைக்காரன்’ ஸ்பெஷல்!

சிவகார்த்திகேயன் மிகப்பெரிய திருப்புமுனைக்காகக் காத்திருக்கும் திரைப்படம் ‘வேலைக்காரன்’. இதில் நயன்தாரா, ஃபஹத் ஃபாசில், பிரகாஷ் ராஜ், சினேகா, தம்பி ராமய்யா என மிகப்பெரிய கலைஞர் பட்டாளத்துடன் களமிறங்குகிறார் சிவகார்த்திகேயன். இதென்ன பெரிய அற்புதம் என்று தோன்றலாம். படம் என்றால் இத்தனை நடிகர்கள் இருக்கத்தானே செய்வார்கள் என நினைக்கலாம். ஆனால், இத்தனை அனுபவம் வாய்ந்த கலைஞர்களுடன் சில படங்களே ஹிட் கொடுத்திருக்கும் சிவகார்த்திகேயன் நடிக்கும்போது, மற்றவர்களின் திறமையைத் தாண்டி நிற்கவேண்டிய அவசியம் கதாநாயகனாக அவருக்கு இருந்தும் இந்தப்படத்தில் நடிக்கிறார் என்றால் அது மிகப்பெரிய ரிஸ்க் அல்லவா?

எப்படியும் வழக்கமான சிவகார்த்திகேயன் படங்களைப் போல, அவருக்கு மட்டும் தனி போஸ்டர்களை ரிலீஸ் செய்து இந்தத் திரைப்படத்தின் கொண்டாட்டங்களை உருவாக்க முடியாது. முக்கிய கேரக்டர்கள், அதிலும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவை தவிர்த்துவிட முடியாது என்னும் பல ‘முடியாதுகளுக்கு மத்தியில் உழைப்பாளர் தினமான மே 1ஆம் தேதி ‘வேலைக்காரன்’ திரைப்படத்தின் First Look போஸ்டரை ரிலீஸ் செய்வதாக அறிவித்திருக்கின்றனர் ‘வேலைக்காரன்’ படக்குழுவினர்.

சிவகார்த்திகேயன் தன்னை தேர்ந்த ஒரு கலைஞனாக அடையாளப்படுத்திக்கொள்ளக் கிடைத்திருக்கும் சிறந்த வாய்ப்பு ‘வேலைக்காரன்’ என்பதில் சந்தேகமே இல்லை.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon