மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

கவர்ச்சி முக்கியமல்ல; கதாபாத்திரம்தான் முக்கியம்! - ஜனனி ஐயர் அதிரடி!

கவர்ச்சி முக்கியமல்ல; கதாபாத்திரம்தான் முக்கியம்! - ஜனனி ஐயர் அதிரடி!

“அதிக நேரம் ஸ்க்ரீன்ல வர்றோமாங்கிறது முக்கியமில்லை. சின்ன கேரக்டர் பண்ணினாலும் அந்த கேரக்டரோட தன்மைதான் முக்கியம். இப்பதான் ‘பலூன்’ ஷூட்டிங் முடிச்சுட்டு கொடைக்கானலில் இருந்து வரேன். எண்பதுகளில் நடப்பது போன்ற கதை. மூன்றாம் பிறைல ஸ்ரீதேவி மேடம் போட்ட காஸ்டியூம்ஸ் ஸ்டைல்ல என் கேரக்டர் இருக்கும்” என்று மின்னம்பலம்.காமுக்கு நடிகை ஜனனி ஐயர் பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யமான தகவல்கள்...

நடிப்பு துறைக்கு எப்படி வந்தீங்க?

நான் இன்ஜினீயரிங் ஸ்டூடண்ட். காலேஜ் படிக்கும்போது மாடலிங் பண்ணிட்டு இருந்தேன். நடிப்பதற்கு நிறைய சான்ஸ் வந்தது. பெருசா இன்ட்ரஸ்ட் காட்டல. அந்தச் சமயத்தில்தான் இயக்குநர் பாலா சார் படத்துல இருந்து கூப்பிட்டாங்க. ஜஸ்ட் ஆடிசன் போய் பார்த்தேன் பெருசா ஏதும் யோசிக்கல. பேபி கேரக்டருக்கு சரியா இருந்தேன்னு செலக்ட் பண்ணாங்க.

இயக்குநர் பாலாவை முதன்முதலில் பார்த்த நிமிடங்கள்?

ஆக்ச்சுவலி ரொம்ப பயமா இருந்தது. எனக்கு தமிழ் தெரியுமான்னு டெஸ்ட் பண்றதுக்காக திடீர்னு ஏதாவது பேச சொன்னாங்க. என்ன பேசறதுன்னு தெரியல. அவரை சுத்தி தேசிய விருது உட்பட பல அவார்டுகள் பார்த்தேன். ‘நான் கடவுள் திரைப்படத்தை மூன்று வாட்டி பார்த்தேன் சார்’ என்று சொன்னதும் சிரித்தார். முதலில் பேசும்போது நெர்வஸ்ஸா இருந்தது. பட், அவர் ரொம்ப ஸ்வீட்.

நடிப்பில் முன் அனுபவம்?

‘அவன் இவன்’ படத்தில் எங்களுக்கு நிறைய ரிகர்சல் இருந்தது. சரியா வந்ததுக்கு பிறகு தான் ஷாட்டுக்கே போவாங்க. அதுனால எனக்கு கொஞ்சம் தைரியமா இருந்தது. எல்லாருமே எக்ஸ்பீரியன்ஸ் ஆர்டிஸ்ட்டா இருந்தது, எனக்கு இன்னும் ஹெல்ப்பா இருந்தது. அவங்ககிட்ட இருந்து நிறையா கத்துக்கிட்டேன். எனக்கு டயலாக் மறந்துருச்சுன்னா நெர்வஸ் ஆகிடுவேன். அந்த சமயத்துல விஷால் சார் ரொம்ப ஹெல்ப்பா இருந்தாங்க. டைரக்டர் பாலா சார் படத்துல நடிச்சதே எனக்கு ஆக்டிங் ஸ்கூல்ல படிச்ச மாதிரி.

நீங்கள் கதை கேட்கும் விதம்?

கதை கேட்டு, ஸ்கிரிப்ட்டும் படிச்சுடுவேன். ஏன்னா, ஒரு சிலருக்கு கதை சொல்ல வராது. ஆனா, அவங்களுடைய ஸ்கிரிப்ட் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும். சொல்ற விதத்தை வெச்சு அவங்கள மதிப்பிட மாட்டேன். செட்டுக்கு போறதுக்கு முன்னாடி தயாரா போகணும்னு நினைப்பேன். அதாவது அடுத்த சீன் என்ன... எந்த மாதிரியான எமோஷனல் காட்டணும்... மற்ற கேரக்டர்கள் என்னன்னு தெரியும் போதுதான் என்னோடதை கரெக்டா பண்ண முடியும்னு நான் நம்புறேன்.

கதைகளில் உங்களின் தலையீடு இருக்குமா?

ஒவ்வொரு டைரக்டரும் தன்னோட கதையை அவங்களோட குழந்தை மாதிரி வச்சிருக்காங்கன்னுதான் சொல்லணும். ஸோ... நம்மள விட அவங்களுக்குத்தான் அதிக அக்கறை இருக்கும். ஒரு சில விஷயங்கள் எனக்கு கம்ஃபர்டபுளா இல்லைன்னா எடுத்து சொல்லுவேன்.

இந்தக் கதாபாத்திரம் என்னால் பண்ண முடியாது... அப்படி ஏதாவது இருக்கிறதா?

என்னோட கம்ஃபர்ட் லெவல் என்ன இருக்கோ அதை மட்டும்தான் பண்ணுவேன். முக்கியமாக இந்த கிளாமர் விஷயம் ஐ ஆம் நாட் கம்ஃபர்ட்.

கதாநாயகியாக மட்டும் தான் நடிப்பீங்களா?

கொஞ்ச நேரம் இருந்தாலும் அந்த கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் நடிப்பேன். அதிக நேரம் ஸ்க்ரீன்ல வர்றோமாங்றது முக்கியமில்லை. அந்தக் கதாபாத்திரத்தின் தன்மைதான் முக்கியம். ஆடியன்ஸும் அதைத்தான் ஞாபகம் வச்சுக்குவாங்க. ஸோ... கேரக்டர் தான் முக்கியம்

உங்கள் கதாபாத்திரத்துக்காக நீங்கள் எடுக்கும் முயற்சி?

ஜஸ்ட் இன்ஸ்பிரேஷனா தான் எடுத்துக்குவேன். உதாரணமாக ஸ்ரீதேவி மேம் எப்படி அந்தக் காலகட்டத்துல ஆக்ட் பண்ணாங்கன்னு பார்க்கணுமே தவிர, அப்படியே காப்பி அடிக்கக் கூடாதுன்னு நினைப்பேன். நமக்குன்னு ஒரு தனி ஸ்டைல் வேணும். க்ரியேட் பண்ணணும். அதுக்காக ஒர்க்கவுட் பண்ணுவேன். அந்த விதத்துல பல பேர் இன்ஸ்பிரேஷனா இருந்திருக்காங்க.

உங்களின் நடிப்பு ஸ்டைல்?

நாம நடிக்கிறோம் என்பது தெரியக் கூடாது. அந்த கேரக்டராவே இயல்பா தெரியணும். எனக்கு இந்த விஷயத்துல கமல் சார் பெரிய இன்ஸ்பிரேஷன். அவரோட எல்லா படங்களும் பார்ப்பேன். எக்சாம்பிள் ‘மைக்கேல் மதன காம ராஜன்’ படம் பார்த்தீங்கன்னா... நாலு பேரு வெவ்வேறாக தெரிவாங்க. அந்த அளவுக்கு உண்மையா இருக்கும். அந்த மாதிரிதான் நானும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

இந்த கதாபாத்திரம் நான் நடித்திருக்கலாம் என்று ஆசைப்பட்டது உண்டா?

ஓ! ‘பிரேமம்’ மலர் கேரக்டர். சாய் பல்லவியை விட நான் நல்லா நடித்திருப்பேன் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. அந்த கேரக்டர் என்னை ரொம்பவும் ஈர்த்தது.

உங்களின் சிறந்த விமர்சகர்?

அம்மாதான். நல்லா இருந்ததுன்னு டக்குன்னு சொல்ல மாட்டாங்க. ஆனா, நல்லா இல்லேன்னா மட்டும் உடனே சொல்லிடுவாங்க. என்னோட நண்பர்களும் கூட.

உங்க ஹாபிஸ்?

எனக்கு மியூசிக் இன்ரஸ்ட். சாங்ஸ் கேட்பேன். ஏ.ஆர்.ரஹ்மான் சார் பாடல்கள் எல்லாமே ஆல் டைம் ஃபேவரைட். பாத்ரூம்ல அடிக்கடி பாடுவேன். அதை தவிர புக்ஸ் படிப்பேன். ஃபேன்டஸி, மித்தாலஜி எனக்கு ரொம்ப பிடித்த சப்ஜெக்ட். ஃப்ரெண்ட்ஸ் நிறைய புக்ஸ் ரெஃபர் பண்ணுவாங்க. உடனே வாங்கிவிடுவேன். அதுவும் மோஸ்ட்லி ஒரே நாளில் எவ்ளோ பெரிய புக்கா இருந்தாலும் படிச்சுடுவேன்.

உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்?

எனக்கு அமேஷ் திருப்பாதி ரொம்ப பிடிக்கும். லார்டு சிவாவோட இன்னொரு வெர்ஷன் எழுதி இருப்பாங்க. நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச சிவனில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும். ரொம்ப இன்ரஸ்டிங்கா இருக்கும். இப்ப ராமன் பற்றி எழுதிட்டு இருக்காங்க.

திரைத்துறைக்கு வந்த இந்த ஆறு ஆண்டில் உங்களை நீங்கள் எப்படி பார்க்கறீங்க?

எந்த பின்புலமும் இல்லாமல் நான் யார் என்று மக்களுக்கு தெரிகிறது. அதுவே பெரிய விஷயம் என்று நினைக்கிறேன். நீண்ட பயணம் போகணும். நல்ல படங்கள் கொடுக்கணும் அதுதான் என் ஆசை.

- அன்னம் அரசு

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon