மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

சென்னையில் 33 காவல் ஆய்வாளர்கள் பணி இடமாற்றம்!

சென்னையில் 33 காவல் ஆய்வாளர்கள் பணி இடமாற்றம்!

சென்னை ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த ஜார்ஜ் ஆளும் தரப்புக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று திமுக, தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் அவரை பணி இடமாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலில் வைத்தது. அதேபோல, ஆர்.கே.நகர் தொகுதிக்குள்ளிருந்த காவல் நிலைய ஆய்வாளர்களும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, சென்னை மாநகரக் காவல் ஆணையராக கரண் சின்ஹா நியமிக்கப்பட்டார். இதனிடையே, ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது என்று தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். இதில் பணப்பட்டுவாடா நடைபெற்றதற்கான சில ஆவணங்கள் வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு, தமிழக அரசியலில் தொடர்ந்து ஓர் அசாதாரண சூழல் நிலவிவருகிறது. இந்த சூழலில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தமிழக உளவுத்துறை ஐஜி-யாக சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், நேர்மையான அதிகாரி என்று பெயர் வாங்கிய சென்னை மாநகர காவல் ஆணையர் கரண் சின்ஹா தனது துறை ரீதியான பணிகளைத் தொடங்கிவிட்டார்.

சென்னை மாநகர காவல் ஆணையர் கரண் சின்ஹா ஏப்ரல் 20ஆம் தேதி வியாழக்கிழமை சென்னை மாநகர காவல்துறையில் இருந்து 33 காவல் ஆய்வாளர்களை பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். பணி இடமாற்றம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர்களின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

(கீழே அடைப்புக்குறிக்குள் காவல் ஆய்வாளர்கள் பணி இடமாற்றம் அறிவிக்கப்பட்டதற்கு முன்பு இருந்த காவல்நிலையம், காவல் பிரிவு குறிப்பிடப்பட்டுள்ளது.)

1. பிரபு (ஆர்.கே. நகர் எச்-6 காவல் நிலையம், குற்றப் பிரிவு) – மாம்பலம் ஆர்-1 காவல் நிலையம் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

2. ரவி (மாம்பலம் ஆர்-1 காவல் நிலையம், சட்டம் ஒழுங்கு பிரிவு) – பூக்கடை சி1 காவல் நிலையம், சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

3. சந்துரு (வளசரவாக்கம் ஆர்-9 காவல் நிலையம், சட்டம் ஒழுங்கு பிரிவு) – வடபழனி ஆர்-8 காவல் நிலையம், சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

4. ஆல்பின் ராஜ் (வடபழனி ஆர்-8 காவல் நிலையம், சட்டம் ஒழுங்கு பிரிவு) - வளசரவாக்கம் ஆர்-9 காவல் நிலையம், சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

5. முனியசாமி (பூந்தமல்லி போக்குவரத்துக் காவல் புலணாய்வுப் பிரிவு, பூந்தமல்லி) – அம்பத்தூர் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைக் காவல் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

6. ஸ்ரீனிவாசன் (செயின்ட் தாமஸ் மவுன்ட், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைக் காவல் பிரிவு) - சென்னை பாதுகாப்பு காவல் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

7. சூரியலிங்கம் (சிட்லப்பாக்கம் எஸ்-12 காவல் நிலையம், சட்டம் ஒழுங்கு பிரிவு) – அசோக்நகர் ஆர்-3 காவல் நிலையம், சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

8. ரமேஷ் (அசோக்நகர் ஆர்-3 காவல் நிலையம், சட்டம் ஒழுங்கு பிரிவு) - சிட்லப்பாக்கம் எஸ்-12 காவல் நிலையம், சட்ட ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

9. புஷ்பராஜ் (ராயலா நகர் காவல் நிலையம், ஆய்வாளர்) – குமரன் நகர் ஆர்-6 காவல் நிலையம் சட்ட ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

10. நாகராஜன் (குமரன் நகர் ஆர்-6 காவல் நிலையம், சட்டம் ஒழுங்கு பிரிவு) - ராயலா நகர் காவல் நிலையம் ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.

11. கண்ணன் (ஐஸ்ஹவுஸ் டி-3 காவல் நிலையம், குற்றப் பிரிவு) – விமான நிலையம் எஸ்-2 காவல்நிலையம் ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.

12. விவேகானந்தன் (சென்னை போலீஸ் காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்) - மாங்காடு டி-14 காவல் நிலையம், சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

13. வெங்கட்குமார் (ஏர்போர்ட் எஸ்-2 காவல்நிலையம், ஆய்வாளர்) – யானை கேட் சி-2 காவல் நிலையம், சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்

14. ஸ்ரீனிவாசன் (அம்பத்தூர் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைக் காவல் பிரிவு) – மவுன்ட் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைக் காவல் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

15. ஆல்ட்ரின் (மாநகர மத்திய குற்றப் பிரிவு) – மாநகர காவல் நுண்ணறிவுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

16. பாபு ராஜேந்திர போஸ் (நந்தம்பாக்கம் எஸ்-4 காவல் நிலையம், குற்றப் பிரிவு) – மாநகர காவல் நுண்ணறிவுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

17. கிருஷ்ணமூர்த்தி (காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்) மாநகர காவல் நுண்ணறிவுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

18. கோதண்டராமன் (துரைப்பாக்கம் ஜே-9 காவல் நிலையம், குற்றப் பிரிவு) - சென்னை பாதுகாப்பு காவல் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

19. இளமதி (சென்னை பாதுகாப்பு காவல் பிரிவு) - சிந்தாதிரிப்பேட்டை எப்-1 காவல் நிலையம், குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

20. நடராஜன் (பள்ளிகரணை எஸ்-1௦ காவல் நிலையம், சட்டம் ஒழுங்கு பிரிவு) – பல்லாவரம் எஸ்-5 காவல் நிலையம், சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

21. ராஜகுமார் (காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்) – கொரட்டூர் டி-4 காவல் நிலையம், சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

22. சுரேஷ்குமார் (யானை கேட் சி-2 காவல் நிலையம், சட்டம் ஒழுங்கு பிரிவு) – மாதவரம் எம்-1 காவல்நிலையம், குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

23. பொன் சித்ரா (காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்) – ஐஓசி எச்-6 காவல் நிலையம் ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.

24. கவிதா (காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்) – கொத்தவால்சாவடி டபிள்யூ-1௦ அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.

25. பிரேமா (காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்) – மாநகர காவல் மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

26. சிட்டிபாபு (காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்) – அடையாறு ஜே-2 காவல் நிலையம், குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

27. முகேஷ் ராவ் (பட்டாபிராம் டி-9 காவல் நிலையம், குற்றப் பிரிவு) - மாநகர காவல் நுண்ணறிவுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

28. செல்வக்குமார் (சங்கர்நகர் எஸ்-6 காவல் நிலையம், குற்ற பிரிவு) - மாநகர காவல் நுண்ணறிவுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

29. தங்கதுரை (அடையார் ஜே-2 காவல் நிலையம், குற்றப் பிரிவு) - மாநகர மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

30. ஆனந்த் (ஃபோர்ஷோர் எஸ்டேட் இ-5 காவல் நிலையம், குற்றப் பிரிவு) - மாநகர மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

31. சிவக்குமார் (புதிய வண்ணாரபேட்டை எச்-5 காவல் நிலையம், குற்ற பிரிவு) - பள்ளிகரணை எஸ்-1௦ சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

32. பாலமுரளி (கொரட்டூர் டி-4 காவல் நிலையம், சட்டம் ஒழுங்கு பிரிவு) - திருவல்லிக்கேணி டி-1 காவல் நிலையம் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

33. கல்யாண் குமார் (திருவல்லிக்கேணி டி-1 காவல் நிலையம், குற்றப் பிரிவு) மாநகர மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர்கள் பெரும்பாலும் சட்டம் ஒழுங்கு, குற்றப் பிரிவு, நுண்ணறிவுப் பிரிவில் உள்ளவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon