மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

சலுகை விலையில் மின்னம்பலம் புத்தகங்கள்!

சலுகை விலையில் மின்னம்பலம் புத்தகங்கள்!

உலகப் புத்தகத் தினத்தை முன்னிட்டு இன்று (21/4/2017) வெள்ளிக்கிழமை, நாளை (22/4/2017) சனிக்கிழமை இரண்டு நாள்களும் மின்னம்பலம் வெளியிட்டுள்ள கீழ்கண்ட நூல்கள் 30 சதவிகித தள்ளுபடியுடன் கிடைக்கும். மின்னம்பலம் அலுவலகத்துக்கு நேரடியாக வந்து வாங்கி செல்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை இரண்டு நாள்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வாசகர்களும் முகவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

‘ஜெ.ஜெயரஞ்சன் கட்டுரைகள்' - இந்திய பொருளாதார மாற்றங்கள்

‘கருப்புப் பணமும் செல்லாத நோட்டும்’ - பண மதிப்பழிப்பு பற்றிய கட்டுரைகள் - தொகுப்பாசிரியர்: ஜெ.ஜெயரஞ்சன்

‘ஏ.ஆர்.ரஹ்மான் : இந்திய திரையிசையின் நவீன அடையாளம்' - விஜய் மகேந்திரன்

'மாதர் திரையுலகு' - ஜா.தீபா

‘உயிர்மெய்’ - அராத்து

‘கருத்தில்லா கந்தசாமிகள்’ - ப்ரியன்

‘சுவாதி’ - எம்.பி.காசிராஜன்

அலுவலக முகவரி:

அண்ணாமலை டிஜிட்டல் இந்தியா,

எண் 66: மூன்றாவது மெயின் ரோடு,

கஸ்தூரிபா நகர், அடையார்,

சென்னை-20

மின்னஞ்சல் முகவரி [email protected]

044- 24421307/ 24422307

பொருளாதாரம் குறித்து ஜெ. ஜெயரஞ்சன் மின்னம்பலத்தில் எழுதிய கட்டுரைகள், மோடி அறிவித்த பண மதிப்பழிப்பு பிரச்னையால் ஏற்பட்ட சூழலில் மிக முக்கியமான விவாதங்களை ஏற்படுத்தின. இப்போது அவருடைய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘ஜெ.ஜெயரஞ்சன் கட்டுரைகள் - இந்திய பொருளாதார மாற்றங்கள்’ என்ற பெயரில் புத்தகமாக வந்துள்ளது. இதன் விலை 150 ரூபாய். இந்திய பொருளாதாரத்தில் வந்துள்ள மாற்றங்களையும், சாதக பாதகங்களையும் அறிந்துகொள்ள இந்த நூல் உதவும். புத்தகத்தின் ஆசிரியர் ஜெ.ஜெயரஞ்சன், சென்னை எம்.ஐ.டி.எஸ் நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சென்னை மாற்று வளர்ச்சி மையத்தை உருவாக்கி இயக்குநராக பணியாற்றி வருகிறார். தமிழக சமூக, பொருளாதாரப் பிரச்னைகள் குறித்து கடந்த முப்பது ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்.

‘கருப்புப் பணமும் செல்லாத நோட்டும்’ - பண மதிப்பழிப்பு பற்றிய முக்கிய கட்டுரைகளும், பதிவுகளும் தொகுக்கப்பட்டு இந்தப் புத்தகம் வெளிவந்து இருக்கிறது. பல்வேறு ஆளுமைகளின் முக்கிய கட்டுரைகள் இதில் இடம் பெற்று இருக்கின்றன. பழைய நோட்டுகள் செல்லாமல் போனது பற்றி தமிழின் முக்கிய எழுத்தாளர்களின் கட்டுரைகளும் இதில் இடம் பெற்று இருக்கிறது. இந்த புத்தகத்தின் விலை 150 ரூபாய்.

விஜய் மகேந்திரன் மின்னம்பலத்தில் தொடராக எழுதிய ஏ.ஆர்.ரஹ்மான் : இந்திய திரையிசையின் நவீன அடையாளம் புத்தக வடிவில் தற்போது மின்னம்பலம் வெளியிட்டு மூன்றாவது பதிப்பாக வெளிவந்திருக்கிறது. இந்தப் புத்தகத்தின் விலை 100 ரூபாய். ஏ.ஆர்,ரஹ்மான் குறித்து அதிகம் வெளியே அறியாத பல தகவல்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன.

மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் எழுதிய கருத்தில்லா கந்தசாமிகள் தற்போதைய அரசியல் நிலவரங்களை சொல்லும் கட்டுரைகள் அடங்கிய நூல். கல்கி குழும பத்திரிகைகளில் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக சிறப்பு செய்தியாளராக எழுத்து பங்களிப்பு செய்து வருபவர் ப்ரியன். இந்தப் புத்தகத்தின் விலை 75 ரூபாய்.

கவனிக்கப்பட வேண்டிய எழுத்தாளரான அராத்து மின்னம்பலத்தில் எழுதிய தொடர் உயிர் + மெய் வாசகர்களின் உற்சாகமான வரவேற்பை பெற்றது. லிவிங் டு கெதர் கலாசாரத்தை மையமாக கொண்டு எழுதிய இந்தத் தொடர், இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டியது. பொருத்தமான ஓவியங்களுடன் புத்தமாக தற்போது வந்துள்ளது. இதன் விலை 150 ரூபாய். தற்போதைய இளைஞர்களின் லைஃப் ஸ்டைல் கையேடாக இந்தபுத்தகத்தை கொள்ளலாம்.

உலக திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர் ஜா.தீபா உலகம் முழுவதும் கவனம் பெற்ற பெண் இயக்குநர்கள் மற்றும் அவர்களது படங்கள் பற்றி மின்னம்பலத்தில் தொடராக எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு மாதர் திரையுலகு - பெண் இயக்குநர்களின் கலை ஆளுமை என்ற பெயரில் புத்தகமாக வந்துள்ளது. இதன் விலை 125 ரூபாய்.

தமிழகத்தை உலுக்கிய சம்பவங்களில் ஒன்றான சுவாதி என்ற பெண் பொறியாளரின் கொலையை, ஒரு சமூக பிரச்னை என்ற சட்டகம் கொண்டு அணுகினால் இதற்கான காரண காரியங்கள் விளங்கும். இத்தீங்குக்கான தீர்வை நோக்கிய தொடக்கப் புள்ளியாக மின்னம்பலத்தில் இந்தச் சம்பவத்தின் பின்னணி, தொடராக வந்திருந்தது. தற்போது அந்த தொடர் நூல் வடிவம் பெற்றுள்ளது. இந்தப் புத்தகத்தின் விலை 110 ரூபாய் மட்டுமே.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon