மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

FAST 8: பால் வாக்கரைப் பயன்படுத்தியது ஏன்?

FAST 8: பால் வாக்கரைப் பயன்படுத்தியது ஏன்?

Fast & The Furious திரைப்படத்தின் வரிசையில் எட்டாவது திரைப்படமாக வெளியாகியிருக்கும் Fate Of The Furious திரைப்படத்தின் வசூல் மழையால் ஹாலிவுட் திரையுலகமே அதிர்ந்துபோய் கிடக்கிறது. ஒரு பில்லியன் டாலர் வசூலைக் கடந்து இந்த வார இறுதியில் சென்றுவிடும் என Forbes பத்திரிகையினால் கணிக்கப்பட்டுள்ளது.

வெறும் ஆக்ஷன் படமாக மட்டும் இருந்திருந்தால் சீனாவில் வரலாறு காணமுடியாத 250 மில்லியன் டாலர் வசூலை அடைந்திருக்க முடியாது. படம் பேசும் அரசியல் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அதன் அடிப்படை குடும்பம் - நட்பு - பாசம் என பிணைக்கப்பட்டிருப்பது தான் Fate Of The Furious-இன் வெற்றி. அதிலும், 2013ஆம் ஆண்டு இறந்துவிட்ட பால் வாக்கர் பற்றிய குறிப்புகள் ஆங்காங்கே இடம்பெற்றிருப்பது, நான்கு வருடங்கள் கழித்தும் MISS YOU PAUL WALKER என ரசிகர்களையும், விமர்சனங்களையும் எழுத வைக்க அதிகம் உதவியது.

Fate Of The Furious - விமர்சனம்

மின்னம்பலம் விமர்சனத்தில் பால் வாக்கரின் நினைவு படத்தில் ஆங்காங்கே வருவதைத் தவிர்க்க முடியவில்லை என்றும், வேண்டுமென்றே படத்தில் அவற்றை வைத்திருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தோம். அதையே தான் Fate Of The Furious இயக்குநர் F.கேரி கேரி தெரிவித்திருக்கிறார்.

நாங்கள் எந்த விதத்திலும் பால் வாக்கரை Fast & The Furious படத்திலிருந்து பிரித்துவிட விரும்பவில்லை. குடும்பத்திலிருந்து பிரிக்க விரும்பவில்லை என்று சொன்னால் சரியாக இருக்கும். கேரக்டர் மூலமாகப் பார்த்தாலும் அந்த வசனம் மிகத் தேவையானது. ரசிகனாக இருந்து பார்த்தாலும் பால் வாக்கரின் தேவை அந்த இடத்தில் அதிகம். ஒரு ரசிகனாகத்தான் அதை எழுதினேன். அதிலும் பால் வாக்கர் இல்லையென்று தோன்றாத வகையில் அவரைப்பற்றிய நினைவுகளுடன் படம் முடிந்தபிறகு செல்ல வேண்டும் என்பதால்தான், வின் டீசல் தனது மகனுக்கு பால் வாக்கரின் பெயரான Brian O’Connor என்பதை வைக்க திட்டமிட்டோம் என்று கூறியிருக்கிறார்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon