மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

சண்டை வேண்டாம்: அமெரிக்கத் தூதர் வலியுறுத்தல்!

சண்டை வேண்டாம்:  அமெரிக்கத் தூதர் வலியுறுத்தல்!

ஐ.நா. சபைக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே இரு நாடுகளுக்கும் இடையே சண்டை வேண்டாம் என்று வட கொரியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வட கொரியா அரசு கடந்த 2006–ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை ஐந்து முறை அணுகுண்டு சோதனைகளையும், மிக அதிகளவில் ஏவுகணை சோதனைகளையும் நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதைத்தொடர்ந்து ஐ.நா. சபையும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தபோதும், வட கொரியா தொடர்ந்து தனது சோதனையை செய்து வருகிறது. இந்நிலையில், ஆறாவது முறையாக அணுகுண்டு சோதனை நடத்த வட கொரியா தயாராக உள்ளதாக தெரிய வருகிறது.

இதனால், வட கொரியாவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், திட்டமிட்டு ராணுவ நடவடிக்கை எடுக்க உள்ளார். அவரது உத்தரவின்பேரில் தென் கொரியாவுக்கு, அமெரிக்காவின் வலிமை மிகுந்த போர்க்கப்பல்களுடன் வீரர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் வட கொரியா - அமெரிக்கா இடையே போர் மூளும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வட கொரியாவும், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கத் தயாராகி வருகிறது.

இந்நிலையில், ஐ.நா. சபைக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே நேற்று ஏப்ரல் 20ஆம் தேதி வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமெரிக்கா வட கொரியாமீது எந்த ஒரு சண்டைக்கும் முயற்சி செய்யவில்லை என்றும், தேவையில்லாத போர் பதற்றத்தை யாரும் உருவாக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon