மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

கெஜ்ரிவாலை முதல்வராகக்கூட பாஜக மதிப்பதில்லை: பிரனாயி விஜயன்

கெஜ்ரிவாலை முதல்வராகக்கூட பாஜக மதிப்பதில்லை: பிரனாயி விஜயன்

‘மாநில ஆளுநர்களை வைத்து பாஜக தனது ஆதிக்கத்தை மாநிலங்களில் செலுத்த முயல்கிறது. டெல்லியில் அர்விந்த் கெஜ்ரிவாலை முதல்வர் என்று கூட மதிப்பதில்லை’ என கேரள முதல்வர் பிரனாயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மத்திய - மாநில உறவுகள் குறித்த கருத்தரங்கில் பேசிய கேரள முதல்வர் பிரனாயி விஜயன் கூறுகையில், “பாஜக ஆளுநர்களை தங்கள் கைக்குள் வைத்துக்கொண்டு மாநிலங்களில் தங்கள் அதிகாரங்களை நிறுவ முயல்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணங்கள் கோவா மற்றும் மணிப்பூர் ஆகியவை. இந்த மாநிலங்களில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியைக் கூட அழைக்காமல் பாஜக-வை நேரடியாக ஆட்சியமைக்க அனுமதித்தனர். இதுபோன்ற செயல்கள் அரசியல் சட்ட விதிகளுக்கு மாறானதோடு ஜனநாயகமற்ற செயல். பாஜக ஆட்சியில் மத்திய - மாநில அரசின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதிலும் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கூட இத்தகைய செயல்பாடுகள் பதற்றத்தினை ஏற்படுத்துகிறது.

டெல்லியில் ஒரு முதல்வராகக்கூட கெஜ்ரிவாலை பாஜக மதிப்பதேயில்லை. பாஜக மூத்த தலைவர்கள் சிலர் கெஜ்ரிவாலுக்கு ஆலோசகர் பங்கு மட்டுமே இருப்பதாக வெளிப்படையாகவே கூறுகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை இவ்வாறு அழைப்பது மக்களாட்சியாகாது” என்று தெரிவித்தார்.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon