மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

நச்சை வெளியிடும் பொம்மைகள்!

நச்சை வெளியிடும் பொம்மைகள்!

‘ரூபிக்ஸ் குயூப் புதிர் பொம்மை’ விளையாட்டு நினைவுத்திறனை அதிகரிக்கும் வகையிலான விளையாட்டாக உள்ளது. இந்த விளையாட்டு பொம்மைகள் பெரும்பாலும் டெல்லியில் தயாரிக்கப்படுகின்றன. இந்த விளையாட்டுகள் குழந்தைகளிடையே பதற்றத்தைத் தணித்து நுண்ணறிவை வளர்க்கும் வகையில் உள்ளதாகவும் கூறுகின்றனர்.

ஆனால், ஐ.பி.இ.என். உலக சிவில் சொசைட்டி நெட்வொர்க் மற்றும் செக் குடியரசின் சுற்றுச்சூழல் அமைப்பான அர்நிக்கா ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஆய்வில், டெல்லியில் உள்ள சில நிறுவனங்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கிலிருந்து பொம்மைகள் தயாரிக்கும்போது அதிக அளவிலான நச்சுக்கூறுகளை வெளியிடுவதாகத் தெரிவிக்கின்றன. மேலும் எலெக்ட்ரானிக் கழிவுகளில் இருந்தும் அதிக அளவில் நச்சுக்கூறுகள் வெளியிடப்படுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. டெல்லி உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த ஆய்வுக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் மூலம், அவற்றில் உள்ள மாசுக்களின் அளவுகள் கணக்கிடப்பட்டு அதில் உள்ள நச்சுக்கூறுகளின் அளவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சாதாரணமாக ஆக்டோ பி.டி.இ-யின் அளவு 50 பி.பி.எம். மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், டெல்லியில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆக்டோ பி.டி.இ-யின் அளவு 336 பி.பி.எம். ஆகவும், டெகா பி.டி.இ-யின் அளவு 516 பி.பி.எம். ஆகவும் உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.

ஆக்டா பி.டி.இ. ஈத்தர் மற்றும் டெகா பி.டி.இ. ஈத்தர் ஆகியவை இனப்பெருக்க அமைப்புக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியவையாகும். இவை, ஹார்மோன் முறைகளைச் சீர்குலைக்கும் என்றும், கவனக்குறைவு, கற்றல் மற்றும் நினைவகம் போன்றவற்றை பாதிக்கும் என்றும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த ஆய்வில், HBCD (ஹெக்ஸார் போரோ சைக்ளோ டோடாக்சேன்)-ன் அளவு டெல்லியில் தயாரிக்கப்படும் பொம்மைகளில் 100 பி.பி.எம். வரையில் பாதுகாப்பான வரம்பை விடக் குறைவான மட்டங்களில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon