மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

எம்.டி.ஆர்: மூன்றே நிமிடங்களில் காலை உணவு!

எம்.டி.ஆர்: மூன்றே நிமிடங்களில் காலை உணவு!

‘பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் காலை உணவாகப் பாரம்பர்ய உணவு வகைகளையே உட்கொள்ள விரும்புவர். கல்லூரி உணவகங்கள், ரயில்வே கேன்டீன்கள் போன்றவற்றிலும் இந்த உணவுகளையே மக்கள் விரும்புவர்’ என்று பெங்களூருவைச் சேர்ந்த துரித உணவுகள் தயாரிப்பு நிறுவனமான எம்.டி.ஆர். நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் சஞ்சய் சர்மா கூறுகிறார்.

‘ஆனால், பள்ளி, கல்லூரி மற்றும் வேலைகளுக்குக் காலையில் விரைவாகச் செல்லும் அவதியில் கெலாக்ஸ் கார்ன்பிளேக்ஸ், ஓட்ஸ் அல்லது முஸ்லி ஆகியவற்றை உண்டு செல்கின்றனர். குளிர்ந்த அல்லது சூடான பாலுடன் இவற்றைக் கலந்தால் போதும் என்பதால் இதுபோன்ற உணவுகளுக்கு மக்கள் மாறி வருகின்றனர்’ என்றும் அவர் கூறுகிறார். மேலும் பெரும்பாலான இளைஞர்கள் காலை உணவைத் தவிர்த்து விடுகின்றனர். காலை உணவு மிகவும் முக்கியமானது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். வாரத்துக்கு ஒருமுறையாவது 70 சதவிகித இளைஞர்கள் காலை உணவைத் தவிர்ப்பதாகவும் சர்மா கூறுகிறார்.

எம்.டி.ஆர். நிறுவனம் இதைக்கருத்தில் கொண்டு, ஆராய்ந்து இந்தியாவில் பிரபலமான காலை உணவு வகைகளை மூன்று நிமிடங்களில் தயார் செய்யப்படும் வகையில் உருவாக்கியுள்ளது. இதில் பிரபலமான மேகி நூடுல்ஸை போன்று உப்புமா, போகா, கேசரி அல்வா, ஓட்ஸ் போன்றவையும் மூன்று நிமிடங்களில் தயாராகும் வகையில் தயாரித்துள்ளது. இதற்கு முன்னரே சந்தையில் ரெடிமேட் பொங்கல், உப்புமா, போகா ஆகிய உணவுப் பொருள்கள் விற்கப்படுகின்றன. ஆனால், இவற்றை தயார் செய்ய 8 நிமிடங்கள் ஆகும். தற்போது எம்.டி.ஆர் நிறுவனம் 3 நிமிடங்களில் தயாராகும் வகையில் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon