மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

‘மாநகரம்’ இயக்குநருடன் கலந்துரையாடல்!

‘மாநகரம்’ இயக்குநருடன் கலந்துரையாடல்!

தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் தமிழ் ஸ்டூடியோ நூறு திரைக்கலைஞர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாளை சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறது. அண்மையில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘மாநகரம்’ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன், நிகழ்கால சினிமா குறித்தும், ரியலிச சினிமாக்கள் குறித்தும், சுயாதீன சினிமா குறித்தும் பார்வையாளர்கள் கலந்துரையாடலாம். அனைவரும் பங்குபெறும் வகையில் அனுமதி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோயில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர், அருகில், விக்ரம் ஸ்டூடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறது.

மேலும் உலகப் புத்தகத் தினத்தை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் (22 & 23) இரண்டு நாள்களும் பியூர் சினிமா புத்தக அங்காடியில் மிஷ்கின், வஸந்த், சாரு நிவேதிதா போன்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் மற்றும் ‘பேசாமொழி’ பதிப்பகப் புத்தகங்கள் அனைத்தும் 50 சதவிகித சலுகைகளிலும் மற்ற பதிப்பகப் புத்தகங்கள் 15 சதவிகித சலுகையிலும் விற்பனைக்குக் கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon