மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 45)

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 45)

டாய்லெட் பிரஷ்ஷால் அடி விழுந்ததும் நிலைகுலைந்த ஸ்யாம், ஷமித்ராவிடமிருந்து பிரஷ்ஷை பிடுங்கினான். கோபத்துடன், ‘ப்ளாடி பிட்ச்’ என்று திட்டிக்கொண்டே அவளைத் தள்ளிவிட்டான்.

கீழே விழுந்த ஷமித்ராவுக்கு, கட்டியிருந்த துண்டு அவிழ்ந்தது. இன்னர்ஸோடு கிடந்தாள். அவமானமாகவும் கோபத்துடனும் எழுந்த ஷமித்ரா, ‘நாயே, ஐ ஜஸ்ட் செட் கெட் அவுட், திரும்பத் திரும்ப இங்கயே நின்னுட்டு இருக்க, அறிவில்ல’ என்று கத்திக்கொண்டே, படுக்கை அருகே இருந்த டேபிள் லேம்பை எடுத்து ஸ்யாம் தலையில் அடிக்கப்போக, ஸ்யாம் பதறி விலகினான். அந்த விளக்கோடு சேர்ந்திருந்த வயர், ஒரு அளவுக்குமேல் விளக்கை இழுக்க முடியாமல் தடுத்தது. அதனால் தப்பித்த ஸ்யாம், அவசரமாக அறையை விட்டு வெளியேறினான்.

கோபத்தில் ஷமித்ராவுக்கு மேல்மூச்சு வாங்கியது, வியர்த்தது. விளக்கை அதனிடத்தில் வைத்தவள் ஏ.சி. இருக்கும்போதே ஃபேனை போட்டுக்கொண்டு அமர்ந்தாள்.

இப்போது வெளியே போய் இதை விதேஷிடம் சொல்லி செருப்பால் அடிக்க வேண்டும். இல்லையென்றால், அவன் இஷ்டத்துக்கு கதை கட்டிவிடுவான் என்ற நினைப்பில் கிளம்ப ஆரம்பித்தாள்.

ஷார்ட் ஜீன்ஸ் + ஸ்லீவ்லெஸ் டி ஷர்ட் அணிந்துகொண்டு, நல்ல ஸ்ட்ராங்கான செருப்பை போட்டுக்கொண்டாள். பார்ட்டி நடக்கும் இடத்துக்கு வந்தாள்.

இரைக்க இரைக்க இன்னும் கதை சொல்லிக்கொண்டு இருந்தான் ஸ்யாம். விதேஷ் முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டு இருந்தான்.

ஷமித்ரா அருகில் வந்ததும், ‘என்ன ஷமி இது’ என்று சீறினான் விதேஷ்.

‘அண்ணா, நான் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு இருக்கும்போது, கதவைக்கூட தட்டாம உள்ள நுழைஞ்சிட்டாண்ணா.’

‘அதுக்காக அடிப்பியா ஷமி?’ குரலில் இன்னும் கடுமை கூடியது.

‘அதுக்காக அடிக்கல. நான் இன்னர்ஸோட ஒக்காந்து இருந்தேன். வெளில போங்கன்னு சொல்லியும் போகல. அது மட்டும் இல்லாம, பின்னாலேயே வந்து என் தோளைத் தொட்டான், அதான் அடிச்சேன்.’

ஸ்யாம் ஆரம்பித்தான். ‘இட் ஈஸ் வெரி கேஷுவல். நான் தப்பாவே பாக்கல, தப்பா ஏதும் செய்யல. ஷமித்ரா டிஸ்டர்ப்டா இருப்பா, நீ போய் கூட்டிட்டு வான்னு விதேஷ் சொன்னான், அதான் வந்து ஜோவியலா இருக்க முயற்சி பண்ணேன்.’

‘நான்தான் கெட் அவுட்டுன்னு கத்தினேன் இல்ல? எத்தனை வாட்டி கத்தினேன்? பொண்ணுங்க டிரஸ் பண்ணிட்டு இருக்கும்போது, இப்பிடித்தான் நாய் மாதிரி உள்ள பூந்து, ஜோவியலா இருப்பியா? பொண்ணுங்க டாய்லெட்டுக்குள்ளயே பூந்துடுவடா நீயெல்லாம்’ என்று ஷமித்ரா கத்தினாள்.

அவளுக்கு ஏன் இவ்வளவு கோபமென்றால், அறையில் என்ன நடந்தது என்று ஷமித்ராவுக்கு தெளிவாகத் தெரியும். அவன் நோக்கம், அவன் பிஹேவியர் எல்லாம் ஷமித்ராவுக்குத் தெரியும். ஆனால், அதையெல்லாம் சுத்தமாக மறைத்து சீன் கிரியேட் செய்கிறான். இந்த விதேஷ் மாடும் மண்டையை ஆட்டிக்கிட்டு நிக்குதே என்றுதான் கண்ட்ரோல் இழந்து கத்தினாள்.

‘ஷமி, தேர் ஈஸ் எ லிமிட். கண்ட்ரோல் யுவர்செல்ஃப். மத்தவங்கள்ளாம் பாக்கறாங்க பாரு’ என்று மற்றவர்களிடம் பார்வையைத் திருப்பினான். மொத்தம் ஏழெட்டுப் பேர் இருப்பார்கள். சிலர் இன்னும் கோட் சூட்டிலேயே இருந்தார்கள். ‘எல்லோரும் என்னோட கெஸ்ட்ஸ். பிஸினஸ் பார்ட்னர்ஸ். சின்ன மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்தான். ரெண்டு பேரும் சாரி கேட்டுட்டு, பார்ட்டிக்கு வாங்க’ என்றான் விதேஷ்.

‘ஸ்யாம், உடனே சாரி கேட்டான். ரியலி சாரி ஷமி. உன்னை கேர் பண்ணத்தான் வந்தேன். சாரி’ என்றான்.

‘என்னால சாரில்லாம் கேக்க முடியாது. ஐ நோ வாட் ஹேப்பண்ட். ஐ ஆம் கோயிங்’ என்று ஷமித்ரா கிளம்பினாள்.

‘ஒரு நிமிஷம் நில்லு ஷமித்ரா’ என்ற விதேஷ், ‘ஆல் ஆர் மை ஃப்ரெண்ட்ஸ், ஜெண்டில்மென். ஜஸ்ட் ஆஸ்க் சாரி’ என்றான்.

‘நோ வே’ என்றாள் ஷமித்ரா.

‘திஸ் ஈஸ் மை ப்ளேஸ், மை பார்ட்டி’ - விதேஷ்

‘சோ’ - ஷமித்ரா

‘மை ரூல்ஸ்’ என்றான் விதேஷ். ‘எவ்ரிஒன் ஹேவ் டூ ஃபாலோ மை ரூல்ஸ், ஆஸ்க் சாரி’ என்றான்.

‘ஐ அல்ரெடி டோல்ட் யூ, சாரில்லாம் கேக்க முடியாது. நான் பார்டிக்கும் வரல’ என்றாள் ஷமித்ரா.

‘தென் யூ டிசைட்’ என்றான் விதேஷ்.

‘வாட் டூ டிசைட்?’ - ஷமித்ரா.

‘நான்தான் சொன்னேனே, இது என் வீடு, முடிவு பண்ணிக்கோ.’

‘சோ, சாரி கேக்கலைன்னா நான் வீட்டைவிட்டுப் போயிடணுமா? ச்சீ, இதை நேரடியாவே சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே, ஐ வில் லீவ், டோண்ட் வொர்ரி’ என்றாள்.

‘என்னால உங்களுக்குள்ள சண்டை வேண்டாம், ஷமித்ரா சாரி கேக்க வேணாம்’ என்றான் ஸ்யாம். ‘ஐ ஆம் ஓகே’ என்று மறுபடியும் சொன்ன ஸ்யாம் விதேஷ் தோளைத் தட்டினான். ‘கூல் விதேஷ், கூல் ஷமித்ரா’ என்ற ஸ்யாம், ‘வாங்க டிரிங்க்ஸ் சாப்பிடலாம்’ என்று ஷமித்ராவை அழைத்தான்.

நாள் 1|நாள் 2|நாள் 3|நாள் 4|நாள் 5|நாள் 6|நாள் 7|நாள் 8|நாள் 9|நாள் 10|நாள் 11|நாள் 12|நாள் 13|நாள் 14|நாள் 15|நாள் 16|நாள் 17|நாள் 18|நாள் 19|நாள் 20|நாள் 21|நாள் 22|நாள் 23|நாள் 24|நாள் 25|நாள் 26|நாள் 27|நாள் 28|நாள் 29||நாள் 30|நாள் 31|நாள் 32|நாள் 33|நாள் 34|நாள் 35|நாள் 36|நாள் 37|நாள்38|நாள் 39|நாள் 40|நாள் 41|நாள் 42|நாள் 43|நாள் 44

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon