மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

புயலை வென்ற SBRM EXPORTS

 புயலை வென்ற  SBRM EXPORTS

பண்ருட்டியை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் SBRM நிறுவனத்தின் சிறப்பு அம்சங்களைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன்னர்... கடலூர் மாவட்டத்தின் முந்திரி உற்பத்தி பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

கடலூர் மாவட்டத்தில் சுமார் 26 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ள முந்திரிக் காடுகளில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 16 ஆயிரம் டன் முந்திரி உற்பத்தி ஆகிறது. முந்திரிக் கொட்டைகளில் இருந்து பிரித்து, பதப்படுத்தி, சுத்திகரித்து தரமான முந்திரிப் பருப்புகளை ஏற்றுமதி செய்யும் தொழில் மூலம் ஆண்டு ஒன்றுக்கு இரு நூறு கோடி ரூபாய் அன்னியச் செலாவணி கிடைக்கிறது

ஒரு லட்சம் பேர் வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறும் இந்த முந்திரித் தொழிலில் பெரும்பாலும் ஈடுபடுவர்கள் கிராமப் புறப் பெண்கள்தான். அவர்களின் வாழ்வாதாரத்துக்கு முந்திரித் தொழில்தான் பெரிதும் உதவியாக இருக்கிறது.

கடலூர் மாவட்டம் பின் தங்கிய மாவட்டமாகவே உள்ளது. இப்படி ஒரு இயற்கை வரமாக முந்திரித் தொழில் வாய்த்திருந்தாலும்... அரசாங்கம் இதை ஊக்குவித்தால்தானே தொழில் வளரும்? முந்திரித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்கு அரசு ஊக்கம் கொடுத்தால்தான் இந்தத் தொழில் அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியும்.

அதிலும் சமீபத்தில் கடலூரைக் குறிவைத்து தாக்கிய தானே புயலால்... மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மரங்கள் சரிந்தன. இதில் முந்திரி மரங்களின் எண்ணிக்கை மிக அதிகம். இதனால் முந்திரித் தொழில் பெரும் சரிவை சந்தித்தது. அதையும் தாண்டி இப்போது நிமிர்ந்து நிற்கிறது என்றால்... SBRM EXPORTS போன்ற தரமான நிறுவனங்கள்தான் காரணம்.

இந்தத் தொழிலுக்கு இன்னும் என்ன வசதிகள் வேண்டும் என SBRM EXPORTS நிறுவனத்தினரிடமே கேட்போம்.

விளம்பர பகுதி

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon