மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

வாழ்வாங்கு வாழ... டிவிஹெச் நிறுவனத்தின் வீடுகள்!

 வாழ்வாங்கு வாழ... டிவிஹெச் நிறுவனத்தின் வீடுகள்!

'மூணு மாச வாடகை அட்வான்ஸ், மாசம் பிறந்த மூணாவது நாள் வாடகை, தண்ணி வரி, கரன்ட் பில், மெயின்டனென்ஸ் சார்ஜ் இதெல்லாம் சேர்த்தும் கொடுக்கத் தயார்னா... நான் வீடு விட ரெடி' சென்னையில் புதிதாக குடியேறிய அத்தனை நபர்களுக்கும் பரிச்சயப்பட்ட வார்த்தைகள்தான் இவை. பொதுவாக, ஒரு மிடில் கிளாஸ் குடும்ப உறுப்பினர்களின் மாத பட்ஜெட்டில் பெரிதாக துண்டுவிழும் தொகையாக வீட்டின் வாடகை மாறிப்போய்விடுகிறது. கணவன் - மனைவி இருவரும் பணிபுரிகிறவர்களாக இருந்தாலும், ஒவ்வொரு மாதமும் வீட்டு வாடகை என்னும் அட்டைப்பூச்சி, அவர்களின் உழைப்பை உறிஞ்சுவதைத் தடுக்க முடியவில்லை.

இவற்றுக்கு சிறந்த மாற்றாக, தற்போது பெரும்பாலான பணிபுரியும் இளைஞர்கள் வீட்டுக்கடன் வாங்கி, அதை அபார்ட்மென்டில் முதலீடு செய்கின்றனர். அவர்கள் வாங்கிய வீட்டுக்கடனை சிறுசிறு தொகையாக மாதச் சம்பளத்தில் கட்ட முடிவெடுத்துவிடுகின்றனர். ஆனால் அவ்வாறு அவர்கள் கடன் பெற்று, வாங்கும் அபார்ட்மென்ட்டின் தரம் என்பது பெரும்பாலும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

கட்டிய சில மாதங்களிலேயே விரிசல், திடீர் திடீரென கட்டடத் துகள்கள் உதிர்வது, நீர்க் கசிவு, வண்ணப்பூச்சு உதிர்தல், போடப்பட்ட டைல்ஸ்களில் திகட்டல் என எக்கச்சக்க குறைபாடுகள் கொண்ட வீட்டைத் தெரியாமல் வாங்கி விட்டு அவதியுறுகின்றனர். இவ்வாறு கண்முன் துன்பப்படும் பெரும்பாலானோர் செய்யும் தவறு, பரிச்சயம் இல்லாத பில்டர்ஸ்களிடம் வீடு வாங்கியதும், அதை அவர்களிடம் கட்டுவதற்கு கொடுத்ததும்தான். எனவே, புதிதாக வீடு வாங்குபவர்களின் லிஸ்ட்டில் நிச்சயம் அனுபவம்வாய்ந்த பில்டர்கள் இடம்பெறுவது மிக முக்கியம். அப்படி ஒரு நம்பிக்கையான கட்டுமான நிறுவனம்தான் டிவிஹெச்.

கட்டுமானத் துறையில் ஓர் முழுமையான பணி:

ஒருபோதும் கட்டட கட்டுமான தரத்தில் டிவிஹெச் சமரசம் செய்து கொள்வதில்லை. முழுமையாக ஒரு வீட்டைக் கட்டும்போது, அதற்கு இணையாக இருப்பது ஆடம்பரமான விஷயங்களும்தான். உதாரணத்துக்கு சுவீடன் கடிகாரம், தலைசிறந்த கார்கள், உயர்மட்ட வாழ்க்கைக்கு உரிய சில பெயர்கள் போல, டிவிஹெச் கட்டுமானத்திலும் அந்த ஆடம்பர மிடுக்கு இருக்கும்.

குறிப்பாக, தர மதிப்பீடுகளை அமைத்தலில் டிவிஹெச் சிறந்த பணியைச் செய்கிறது. அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைக்கிறது. எதிர்காலத்தில் நடைபெற இருப்பதை தொலைநோக்குப் பார்வையோடு உருவாக்குகிறது. இதுதவிர, டிவிஹெச் நிறுவனத்தை நம்புவதற்கு ஒரு நியாயமான காரணம் உண்டு. ஆரம்பத்தில் மாதிரி வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டபோது எந்த வடிவமைப்பில் இருந்ததோ, அந்த வடிவமைப்பையே இறுதிவரை தக்கவைத்திருக்கிறது. கட்டடத்தில் முழுமை என்பதையே தன் தாரக மந்திரமாகக் கொண்டு 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

டிவிஹெச் நிறுவனத்துக்கு கிடைத்த அங்கீகாரங்கள்:

2014இல் டிவிஹெச் குவார்ட்ரன்ட்க்காக, 'சென்னைக்கான, சிறப்பான சிறந்த ஆடம்பர வீட்டுத் திட்ட விருது' வாங்கியுள்ளது. இதை, சின்பிசி - அவாஸ் ரியல் எஸ்டேட் துறை வழங்கி கெளரவப்படுத்தியுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு 'சிலிக்கான் இந்தியா' அமைப்பின் ரியல் எஸ்டேட் விருது, டிவிஹெச் நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது.

'அடையாறு, மக்கள் வசிப்பதற்கு ஏற்ற இடமாக மாறிவிட்டது. ஏனெனில், அங்குதான் மக்களுக்குப் பிடித்த டிவிஹெச் வீடுகள் அமைகின்றன' இது, என்டிடிவி -இன் செய்திக்குறிப்பு. இவையெல்லாம் டிவிஹெச் நிறுவனத்துக்கு கிடைத்த அங்கீகாரங்கள்.

டிவிஹெச் வீடுகள் பற்றி வாடிக்கையாளர்களின் குரல்கள்:

​'என்னுடைய அனுபவத்தில், ஒரு வாடிக்கையாளருடன் நல்ல உறவை கடைப்பிடிப்பதில் மிகச்சிறந்த நிறுவனம், டிவிஹெச். ஏனெனில், வீடு கட்டுவதில் நிறைய விஷயங்களை எங்களுடன் பேசிவிட்டு, அதையெல்லாம் ஆக்கபூர்வமாக ஃபாலோ செய்து முடித்துக் கொடுத்தது டிவிஹெச்' என்கிறார் டிவிஹெச்சில் வீடு வாங்கிய சார்ட்டர்டு அக்கவுன்டென்ட் ஆன மகேஷ்குமார்.

'நாங்கள் எதிர்பார்த்ததை எடுத்து ஆரம்பத்திலேயே சிறப்பாக செதுக்கிக் கொடுத்தார்கள். இப்போது அந்த கட்டுமானத்தைப் பெற அதில் எவ்வளவு கடின உழைப்பு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. நாங்கள் கடின உழைப்பை பார்த்திருக்கிறோம்' என்கிறார், தொழிலதிபர் ராஜா நாராயண்.

'நாங்கள் குடும்பத்தோடு அமெரிக்காவில் வசித்து வந்தோம். ஓய்வுக்குப்பின், இந்தியாவில் குடியேற எண்ணியபோதுதான் டிவிஹெச் வீடுகள் பற்றி அறிந்தோம். உடனே, நான் பிறந்து வளர்ந்து பள்ளிசென்ற அடையார் பகுதியில் டிவிஹெச் வீட்டை வாங்கினோம்' என்றார், டிவிஹெச்-இல் வீடு வாங்கிய கீதா.

'நீங்கள் வாருங்கள், என்னுடைய அபார்ட்மென்ட்டை பாருங்கள், மிக அழகாக இருக்கும். நகரத்தினுடைய 360 டிகிரி கோணத்தையும் கண்டு ரசிக்க முடியும்' என்றார், பாமினி என்னும் இல்லத்தரசி.

இவை டிவிஹெச்-சின் பணிக்கு வாடிக்கையாளர்கள் அளித்த நம்பிக்கைக் குரல்கள். இவை யாவும் மிகைப்படுத்தப்படாத உண்மை என்பது டிவிஹெச்-சின் ஒவ்வொரு புராஜெக்ட்டுகளிலும் மிளிர்கிறது.

கட்டுமானத் துறையில் டிவிஹெச் செய்த சாதனை குறித்து, டிவிஹெச் நிறுவனத்தின் சேர்மன் திரு.ரவிச்சந்திரன் கூறுகையில், 'கடந்த 20 ஆண்டுகளாக கட்டுமானத் துறையில் வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவை என்பதை தெரிந்து வைத்திருக்கிறோம். எங்களுடைய தயாரிப்புகள் ஒவ்வொன்றையும் சிறந்த ஒன்றாக, சிறந்த வடிவமைப்புமிக்கதாக, சிறந்த முறையில் பணிகளை, முடித்து ஒப்படைக்கிறோம். எங்களிடம் வீடு வாங்கிய வாடிக்கையாளர்களே, திரும்பவும் வீடு வாங்கும் அளவுக்கு எங்களுடைய பணி நிச்சயம் இருந்திருக்கிறது. நாங்கள் பழைய வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ளவே விரும்புகிறோம். இதுதான் எங்கள் வெற்றிக்குக் காரணம்' என்றார்.

வாடிக்கையாளர்களுடைய ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்யும் டிவிஹெச் நிறுவனத்தின் நேர்த்தியான வீடுகளை வாங்குவோம். மகிழ்ச்சி பொங்க வாழ்வோம்.

மேலும் விவரங்களுக்கு....

விளம்பர பகுதி

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon