மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

சங்கமித்ராவில் ஸ்ருதி பதினாறு அடி பாய்வார்!

 சங்கமித்ராவில்  ஸ்ருதி பதினாறு அடி பாய்வார்!

கமர்சியல் இயக்குநர்களில் பேர்போன இயக்குநரான சுந்தர்.சி இயக்கவிருக்கும் பிரம்மாண்டமான திரைப்படம் ‘சங்கமித்ரா’. இதன் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் துவங்கவிருக்கிறது. ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் என்.ராமசாமி தயாரிக்கும் ‘சங்கமித்ரா’வின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி வட இந்தியாவில் உள்ள பேரரசர்கள் வாழ்ந்த கோட்டைகள், அரண்மனைகள் மற்றும் சீனா, அமெரிக்க முதலான நாடுகளிலும் நடக்கவிருக்கிறது. முதன் முதலாக இசையமைபபாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் கூட்டணி அமைக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி. கலைக்கு சாபு சிரில், இந்த ஆண்டு ஒளிப்பதிவிற்கான தேசிய விருது வாங்கிய ஒளிப்பதிவாளர் திரு முதற்கொண்ட முன்னணி கலைஞ்ரகள் இப்படத்தில் பணியாற்ற இருக்கிறார்கள்.

ஆர்யா, ‘ஜெயம்’ ரவி, ஸ்ருதிஹாசன் முதலானோர் ஒப்பந்தமாகியுள்ள நிலையில் மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன் போர் வீராங்கனை போன்ற ஒரு கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்காக பல பயிற்சிகளை மேற்கொண்டு வரும் ஸ்ருதி ஹாசன் தற்போது லண்டனிலுள்ள ஒரு பிரபல சண்டை பயிற்சியாளரிடம் வாள் சண்டை பயிற்சி பெற்று வருகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இது போன்ற அபரிமிதமான முயற்சிகள் எடுப்பதில் சகலகலா வல்லவனாக நடிகர் கமலஹாசன் திகழ்ந்தார். தற்போது அவரது மகள் அவரின் பேர் சொல்லும் பிள்ளையாக வளர்ந்து கொண்டிருக்கிறார். முடியாது, நடக்காது என்ற சொல்லே எனது அகராதியில் கிடையாது. என்று இது குறித்து ஆங்கில இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் சொல்லியிருக்கிறார் ஸ்ருதி...

'சிறுவயதில் இருந்தே உன்னால் இதை செய்ய முடியாது என்று யாராவது சொன்னால் அதை வைராக்கியத்தோடு செய்து முடிக்கும் மனோபாவம் எனக்குள் இருக்கிறது. அந்த வேலையை செய்து முடிப்பதுவரை தூங்கவும் மாட்டேன். வளர்ந்த பிறகும் அந்த பழக்கம் என்னை விட்டுப்போகவில்லை. எதற்கும் பயப்பட மாட்டேன். சாதிக்க வேண்டும் என்ற உணர்வு எப்போதும் எனக்குள் உண்டு.

ஏதேனும் கஷ்டமான கதாபாத்திரம் வந்தால் இதை நம்மால் செய்ய முடியுமா? என்று தயங்குவது இல்லை. கண்டிப்பாக என்னால் நடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கைதான் ஏற்படும். கதாநாயகியாக வெற்றி பெற்று விட்டதால் இதை சொல்வதாக நினைக்க கூடாது. சினிமா துறையில் அடியெடுத்து வைத்த நாளில் இருந்து இப்படித்தான் இருக்கிறேன். கடுமையாக உழைக்கலாம். கஷ்டப்படலாம். பலன் தானாக வந்து சேரும். சினிமாஉலகம் நிறைய நல்லது செய்து இருக்கிறது.' என்று அந்த பேட்டியில் மனம் திறந்துள்ளார் ஸ்ருதி.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon