மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

மதுக்கடை மூடல் : ஐந்தில் நான்கு பேர் ஆதரவு!

மதுக்கடை மூடல் : ஐந்தில் நான்கு பேர் ஆதரவு!

தேசிய நெடுஞ்சாலைகளிலுள்ள மதுபானக் கடைகளை மூடும் உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆதரவும் எதிர்ப்புகளும் எழுந்துவரும் நிலையில், ஐந்தில் நான்கு பேர் இந்த தடை உத்தரவுக்கு ஆதரவளிப்பதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த செய்தி நிறுவனமான இன்ஷார்ட்ஸ், தனது செயலியில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகள் மூடப்பட்டது குறித்து கருத்துக்கணிப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. ஏப்ரல் 7-9 தேதிகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இன்ஷார்ட்ஸ் செயலியைப் பயன்படுத்தும் சுமார் 16,729 பயன்பாட்டாளர்களிடமிருந்து 1.13 லட்சம் கருத்துகள் வந்துள்ளன. அதில் 71 சதவிகிதத்தினர் தாங்கள் மதுபானப் பிரியர்களாக இருப்பதாகவும் எனினும், அரசின் இந்த தடையை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 24 சதவிகிதத்தினர் மதுக்கடைகளை மூடும் உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வில் ‘நீங்கள் மதுபானம் அருந்துபவரா?’ என்ற கேள்விக்கு, ‘ஆம்’ என்று 40 சதவிகிதத்தினரும், ‘இல்லை’ என்று 56 சதவிகிதத்தினரும், ‘கருத்துக் கூற விரும்பவில்லை’ என்று 4 சதவிகிதத்தினரும் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலானோர், நெடுஞ்சாலைகளிலுள்ள மதுக்கடைகளை மூடுவதால் குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் நடவடிக்கை குறையும் என்று தெரிவித்துள்ளனர்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon