மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

மீண்டும் இணைவார்களா வடிவேல் - சிங்கமுத்து?

மீண்டும் இணைவார்களா வடிவேல் - சிங்கமுத்து?

கவுண்டமணி – செந்தில் ஜோடிக்கு பிறகு அதே அளவு மக்களிடத்தில் பெரும் வரவேற்பு பெற்ற நகைச்சுவை ஜோடி நடிகர் வடிவேலு, சிங்கமுத்து ஜோடியாகும். வடிவேலுவோடு நடித்தது மட்டுமல்லாமல் ஆரம்ப காலகட்டங்களில் ஒரு சில திரைப்படங்களுக்கு நகைச்சுவைக்கான வசனங்களும், சில காட்சி அமைப்புகளையும் அமைத்ததில் பெரும் பங்கு நடிகர் சிங்கமுத்துவிற்கு உண்டு. இவர்கள் கூட்டணியில் பல வெற்றி படங்கள் இன்றளவும் மக்கள் மத்தியில் எப்ப பார்த்தாலும் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது. ‘இங்லீஷ்காரன்’ திரைப்படத்தில் ‘தீப்பொறி திருமுகம்’, ‘திமிரு’ திரைப்படத்தில் அமைந்த ‘சோடா குடிக்கும் காட்சி’ என சொல்லிக்கொண்டே போகலாம். அப்படிப்பட்ட கூடடணி யார் கண் பட்டதோ ஒரு சில காரணங்களுக்காக இன்று வரை ஒன்று சேராமல் இருக்கிறது.

2010 ஆம் ஆண்டு தாம்பரம் அருகே நிலம் வாங்கியது தொடர்பாக தன்னை ஏமாற்றி விட்டதாக சிங்கமுத்து உட்பட ஆறு பேர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் நடிகர் வடிவேலு. நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கு கடந்த ஏழாம் தேதி விசாரணைக்கு வந்தது. அனால் இருவருமே ஆஜராகவில்லை. இந்த நிலையில் இன்று20 தேதி நேரில் ஆஜராகும் படி கோர்ட் உத்தரவிட்டது. அதன் படி இருவரும் ஆஜராக வந்தனர். மீண்டும் சமரசமாக இணைந்து பல வெற்றிகள் தருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சுழலில் இருவரும் சமரசம் ஆகாததால் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon