மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

சுட்டெரிக்கும் வெயில் : பள்ளிகளுக்கு விடுமுறை!

சுட்டெரிக்கும் வெயில் : பள்ளிகளுக்கு விடுமுறை!

பருவ மழை பொய்த்துப் போனதால் கோடை வெப்பம் அதிகமாக இருக்கும் என அஞ்சப்பட்டது. இந்த ஆண்டு கடும் வறட்சி ஏற்பட்டு வெப்பம் அதிகரித்துள்ளது. மேலும் நிழலுக்கு ஒதுங்கக்கூட மரங்கள் இல்லாமல் கட்டடங்கள் ஆக்கிரமித்துள்ளன. இதனால், சுட்டெரிக்கும் கோடை வெப்பத்துக்கு மக்கள் பலியாகி வருகின்றனர்.

இந்நிலையில், கடும் வெயில் காரணமாக புதுச்சேரியில் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளையும் மூட புதுச்சேரி பள்ளிக்கல்வித் துறை அமைச்சகம் இன்று (ஏப்ரல், 20) உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துவருவதால், பள்ளி செல்லும் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, பள்ளிகளை மூட பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

கல்வித் துறையின் இணை இயக்குநர் கிருஷ்ணராஜ் இதற்கான ஆணையை வெளியிட்டுள்ளார்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon