மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

இசையமைப்பாளர் சி.சத்யாவின் சிங்கிள் டிராக் வெளியீடு!

இசையமைப்பாளர் சி.சத்யாவின் சிங்கிள் டிராக் வெளியீடு!

எங்கேயும் எப்போதும்' படம் வெளியாவதற்கு முன்பே பாடல்கள் வெளிவந்து பெரிய வெற்றியை பெற்றன. யார் இந்த சத்யா? என்று அனைத்து இசை ரசிகர்களின் புருவத்தையும் முதல் படத்திலேயே உயர்த்த வைத்தவர் சி.சத்யா. தொடர்ந்து 'இவன் வேற மாதிரி', 'நெடுஞ்சாலை', 'பொன்மலைப் பொழுது' என்று இசைப்பயணத்தை தொடர்ந்து வரும் இவரின் சமீபத்திய படம் ஆர்,பார்த்திபனின் ' கோடிட்ட இடங்களை நிரப்புக' . இந்த படத்திலும் பாடல்கள் பெரிதும் பேசப்பட்டன. துள்ளிசை பாடல்களையும், மெல்லிசை பாடல்களையும் நல்ல தரத்துடன் கொடுப்பவர் என்று இவருக்கு பெயருண்டு. ' எங்கேயும் எப்போதும்' ' நெடுஞ்சாலை' இரண்டு படங்களும் இவரது பின்னணி இசைக்காகவும் பாராட்டப்பட்டவை. தற்போது விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி, பிந்து மாதவி நடிக்கும் 'பக்கா' படத்திற்கு பக்காவாக கிராமிய பாடல்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

நாளை காலை (20/4/2017) சத்யம் திரையரங்கில் 9 மணி அளவில் 'ஜெட்லீ' படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் பிக்சர் போஸ்டரும், 'அடியே வள்ளி' என்ற பாடலையும் வெளியிட இருக்கிறார்கள். 'அடியே வள்ளி' பாடலை சி.சத்யா இசையமைத்து பாடியிருக்கிறார். இந்த ஒரு பாடலில் மேற்கத்திய இசை வடிவங்களான கலந்து சோதனை வடிவத்தில் பாடலை கொடுத்திருக்கிறார். மிகவும் புதிய ஒலியில் பாடலை பதிவு செய்திருக்கிறார்கள். இந்த பாடலுக்கு எடுத்த காட்சி வடிவமும் நாளை திரையிடப்படுகிறது. சாய் ஜெகன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon