மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

மிஷின் இம்பாசிபிள் 6: இந்தியா வரும் ஆக்‌ஷன் ஆர்வலர்கள்!

மிஷின் இம்பாசிபிள் 6: இந்தியா வரும் ஆக்‌ஷன் ஆர்வலர்கள்!

மிஷின் இம்பாசிபிள் திரைப்பட வரிசையில் 6வது பாகத்தை படமாக்கிவருகிறார் இயக்குநர் கிறிஸ்டோஃபர் மெக்குவாரி. டாம் குரூஸ் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக இருந்தாலும் அவரை சூப்பர் ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியது மிஷின் இம்பாசிபிள் திரைப்படங்கள் தான்.

உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் வெளியே ஏறிச்செல்வது, பறக்கும் விமானத்தைப் பிடித்துக்கொண்டு தொங்கியது என டாம் குரூஸின் ஆக்‌ஷன் எல்லைகளை சமரசமின்றி அடித்து உடைத்தவை இந்தத் திரைப்படங்கள். இந்தப்படத்துக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக சூப்பர் மேன் திரைப்படப் புகழ் ஹென்றி கவில்-ஐயும் மிஷின் இம்பாசிபிள் 6-இல் இணைத்திருக்கிறார்கள்.

என்ன சாகசம் செய்தாலும் அதைப் பார்க்கும் விதத்தில் தான் ஒரு திரைப்படம் பார்த்ததற்கான திருப்தி இருக்கிறது. தமிழ்த் திரைப்படங்களில் பலவற்றை திருட்டு விசிடியில் பார்ப்பதற்கும் ஆங்கிலப் படங்கள் ரிலீஸானால் தியேட்டரில் சென்று பார்ப்பதற்குமுள்ள வித்தியாசம் அந்த திருப்தி தான். படத்தை எடுக்கும் விதம் தான் அந்த திருப்தியை முடிவு செய்கிறது.

அந்தவகையில் மிஷின் இம்பாசிபில் 6 படத்தை அவெஞ்சர்ஸ்: Infinity War, Beauty and the Beast வரிசையில் முழுக்க முழுக்க IMAX தொழில்நுட்பத்தில் படமாக்க முடிவெடுத்திருக்கின்றனர் அதன் படைப்பாளிகள். இந்தத் திரைப்படத்தின் கதை லண்டன், இந்தியா, பாரிஸ், நியூசிலாந்து ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்திவருகின்றனர். மிஷின் இம்பாசிபிள் படங்களுக்கு இந்தியாவில் இருக்கும் வரவேற்பினால் கதையை இப்படி அமைத்திருப்பதாக கூறியிருக்கிறார் அதன் இயக்குனர் கிறிஸ்டோஃபர் மெக்குவாரி.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon