மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

நகை - ரத்தினங்கள் துறையில் முதலிடம் : மோடி

நகை - ரத்தினங்கள் துறையில் முதலிடம் : மோடி

சர்வதேச அளவில் நகை மற்றும் ரத்தினங்கள் துறையில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேறி நீடித்திருக்க வேண்டும் என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம், சூரத் இச்சாபூரில் ஹரிகிருஷ்ணா வைரம் பட்டை தீட்டும் ஆலையைத் திறந்துவைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ‘சூரத் நகரில் வைரம் அறுத்தல் மற்றும் பட்டை தீட்டும் தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எனவே, இந்தியா சூரத் நகரின்மீது மிகுந்த எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளது. சூரத் நகரில் 5000க்கும் மேற்பட்ட வைர உற்பத்தி நிலையங்கள் உள்ளன. வைரத் துறையானது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவிகித பங்களிப்பைக் கொண்டுள்ளது. அதோடு நின்றுவிடாமல், ரத்தினங்கள் மற்றும் நகைகள் துறையை அதீத வளர்ச்சியடையச் செய்ய பாடுபடவேண்டும்.

’மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு உறுதுணையாக இந்த வைரத் துறையானது நாட்டில் அதிகமான அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. கடந்த 2015-16 நிதியாண்டில் மட்டும் இத்துறையின் ஏற்றுமதி 32 பில்லியன் டாலர்களாக உள்ளது. எனவே, ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது’ என்றார்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon