மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

உலக அழகியாக ஜூலியா ராபர்ட்ஸ்

உலக அழகியாக ஜூலியா ராபர்ட்ஸ்

People என்ற அமெரிக்க நாளிதழ் வெளியிட்ட தகவலின்படி, அவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் உலகின் மிக அழகான பெண் என்ற பட்டத்தை 5ஆவது முறையாக ஹாலிவுட் நடிகை Julia Roberts பெற்றுள்ளார். 49 வயதான அவர், இதற்குமுன்னர் 1991ஆம் ஆண்டு முதன்முதலாக 'pretty women' திரைப்படத்துக்குப் பின்னர் உலக அழகி என்ற பட்டம் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். அதன்பின்னர் 2000, 2005, 2010 போன்ற வருடங்களிலும் இவருக்கு உலக அழகி என மக்கள் வாக்கெடுப்பில் முன்னிலை பெற்றார். தற்போது 5ஆவது முறையாக people நாளிதழால் உலகின் அழகிய பெண்மணி என கவுரவிக்கப்பட்டுள்ளார். பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ள Julia Roberts, 2001ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது பெற்றவர்.

இவர் நடித்து வெளியான Pretty woman, runaway bride, erin brockovich, i love truble போன்ற திரைப்படங்கள் மிகப் பிரபலமானவை. குறிப்பாக, erin brockovich திரைப்படத்துக்காக தேசிய விருது, ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப், லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விருது என பல விருதுகளைப் பெற்றவர். இவரின் மிக நெருங்கிய தோழியும், திரைப்பட நடிகையுமான Jennifer Aniston கடந்த ஆண்டு உலகின் அழகான பெண் என்று people நாளிதழால் குறிப்பிடப்பட்டிருந்தார்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon