மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

குற்றவாளிகளுடன் தொடர்புள்ள போலீஸ்மீது நடவடிக்கை : உ.பி.முதல்வர்

குற்றவாளிகளுடன் தொடர்புள்ள போலீஸ்மீது நடவடிக்கை : உ.பி.முதல்வர்

உ.பி.யில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் குற்றவாளிகள் அனைவருக்கும் சமமான முறையில் ஒரே உணவையே வழங்க வேண்டும் என்று, முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாநிலத்தின் வளர்ச்சிப் பணி குறித்து உள்துறை, காவல்துறை மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுடன் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று ஏப்ரல் 19ஆம் தேதி ஆலோசனை நடத்தியபிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: உ.பி. சிறையில் இருக்கும் கைதிகள் செல்போன்கள் உள்பட பல வசதிகளை சிறைத்துறை அதிகாரிகள் துணையுடன் அனுபவித்து வருவதாக அடிக்கடி செய்திகள் வருகின்றன. அதை தவிர்க்கும்வகையில், சிறைக்குள் திடீர் சோதனைகள் அடிக்கடி நடத்தவேண்டும்.

சிறைக்குள் இருக்கும் பெரிய குற்றவாளிகள் முதல் சிறிய குற்றவாளிகள் வரை அனைவருக்கும் ஒரே உணவு வழங்கப்பட்டு அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். மேலும் மோசமான கிரிமினல் குற்றவாளிகள் மருத்துவ சிகிச்சை என்ற பொய் சாக்குகளை கூறிக்கொண்டு சலுகைகள் அனுபவிப்பதை அனுமதிக்க முடியாது.

போலீசார்கள் லஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபடாதவகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். மேலும் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் சிறை அதிகாரிகள் மற்றும் போலீசார்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon