மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

பூனம் பாஜ்வா - 'இனி நோ கிளாமர்'!

 பூனம் பாஜ்வா - 'இனி நோ கிளாமர்'!

நடிகர் ஜீவாவுடன் 'தெனாவெட்டு' படத்தில் அறிமுகம் ஆனவர் பூனம் பாஜ்வா. ஆரம்பத்தில் ஹோம்லியான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்த பூனம் படங்கள் குறைய ஆரம்பித்த போது தெலுங்கில் சென்று கிளாமராக படங்களில் நடித்தார். சிறிய இடைவேளைக்கு பிறகு பூனம் பாஜ்வா தமிழில் ஜெயம்ரவியுடன் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் நடித்தார். சுந்தர்.சியின் ‘முத்தின கத்தரிக்கா’ என்ற படத்திலும் கவர்ச்சி நாயகியாக நடித்தார். தொடர்ந்து சுந்தர்.சியின் ‘அரண்மனை-2’ படத்திலும் நடித்தார்.

தற்போது பூனம் பாஜ்வா, பாபா பாஸ்கர் இயக்கி வரும் ‘குப்பத்து ராஜா’ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு மே 1-ம் தேதி முதல் தொடங்குகிறது.

மேலும், இந்த படத்தில் பூனம் பாஜ்வா படம் முழுக்க புடவை கட்டி குடும்பப் பாங்கான வேடத்தில் நடிக்கிறார். அதனால் தன்னைத்தேடி வந்த சில கிளாமர் கவர்ச்சி கேரக்டர்களில் நடிக்க மறுத்து விட்டார். இனிமேல் கிளாமர் இல்லாத அழுத்தமான கேரக்டரில் நடிக்க முன்னுரிமை கொடுக்கப் போவதாக இணைய இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். கவர்ச்சி இல்லாத பூனத்தை மக்கள் ரசிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon