மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

பேப்பர் கோப்பைகளை பயன்படுத்தி கின்னஸ் சாதனை முயற்சி!

பேப்பர் கோப்பைகளை பயன்படுத்தி கின்னஸ் சாதனை முயற்சி!

கோவையில் தனியார் பள்ளி மாணவர்கள் பேப்பர் கோப்பைகளை பயன்படுத்தி கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். கோவை கணபதியை அடுத்த மணிகாரம்பாளையம் பகுதியில் கேம்போர்டு இண்டர்நேஷனல் எனப்படும் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் உருவப்படத்தை பேப்பர் கோப்பைகளை பயன்படுத்தி வடிவமைக்க திட்டமிட்டிருந்தனர்.

அதன்படி, இன்று ஏப்ரல் 20ஆம் தேதி காலை 6.30 மணி முதல் இதற்கான பணியைத் தொடங்கினர். 167 மாணவர்களின் கூட்டு முயற்சியால் 3 மணி நேரம் 40 நிமிடங்களில் வடிவமைத்து முடிக்கப்பட்டது.

சுமார் 2 லட்சத்து 35 ஆயிரம் நீலம், வெள்ளை, ஆரஞ்சு, கருப்பு நிறங்களைக் கொண்ட பேப்பர் கோப்பைகளை பயன்படுத்தி 10 ஆயிரத்து 560 சதுர அடி பரப்பளவில் கலாமின் உருவப்படம் வடிவமைக்கப்பட்டது.

கடந்த 2016ஆம் லக்னோவில் சுமார் 250 வோடபோன் ஊழியர்கள் இணைந்து 1லட்சத்து 40 ஆயிரம் காகிதக் கோப்பைகளை பயன்படுத்தி வோடபோன் லோகோவை வடிவமைத்து சாதனை படைத்தனர். அதை முறியடிக்கும்வகையில் மாணவ, மாணவியர்கள் இந்த முயற்சியை மேற்கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்களின் இந்தச் செயலை வீடியோவாக பதிவு செய்யப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்கான ஆதாரமாக அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon