மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

அம்மா இங்கே வா வா! இரட்டை இலையை தா தா! - அப்டேட் குமாரு

அம்மா இங்கே வா வா! இரட்டை இலையை தா தா! - அப்டேட் குமாரு

கட்சிக்கு பிரச்னையா? இரட்டை இலைக்கு பிரச்னையா? முதல்வர் பதவிக்கு பிரச்னையா? இன்கம் டேக்ஸ் ரைடுக்கு பிரச்னையா? என்ன விஷயம்னே தெரியாம, ஏதோ பிரச்னை இருக்குன்னு மட்டும் பொழுதை ஓட்ட வேண்டியதா இருக்கு. இதே கலைஞர் ஆக்டிவா இருந்திருந்தா ‘இலைக்கு அடித்துக்கொள்கிறார்கள்’னு ஒரே ஸ்டேட்மெண்ட்ல கரிய பூசிட்டு டாட்டா காட்டிட்டு போயிருப்பார். அப்டேட்டை பாருங்க.

//Kamali

கடந்துவிட வேண்டும் என்பதற்கும், கடந்துவிடக்கூடாது என்பதற்கும் இடைப்பட்ட ஒரு மைய புள்ளியில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது நினைவுகள்…..//

//Karunakaran Karthikeyan

காந்தி நேதாஜி எல்லாம் தியாகி இல்ல. சசிகலாவும், தினகரனும் தானாம்.//

//Mani Dhanuskodi

ஓ பி எஸ்ஸும் இ பி எஸ்ஸும் சேர்ந்து தமிழ்நாட்டுக்கு நல்லது பண்ணப் போறதில்ல.......அட்லீஸ்ட் தீபாவை அது புருஷனோட சேர்த்து வைய்யுங்கய்யா......அந்தம்மா ஆன்மா சாந்தியடையும்!//

//Mani Dhanuskodi

ஜெவை இரும்பு மனுஷி நிர்வாகப் புலின்னு புரூடா விட்டானுங்க......சொல்லிட்டுப் போங்கடான்னு விட்டுட்டோம்

ஓ பி எஸ்ஸை விசுவாசின்னாங்க.....சரி போங்கடான்னோம்

சசியை தியாகின்னானுங்க......கருமம் அதையும் கடந்துட்டோம்

இப்போ தினகரனை தியாகின்றானுங்க.....

டேய் பூராவுமே அக்யூஸ்ட் கேங்குன்னு எப்போதாண்டா புரிஞ்சிக்குவீங்க?//

//ரா புவன்

ஓபிஎஸ்ஸை திமுகதான் தூண்டிவிட்டுச்சுன்னு கம்பு சுத்திட்டு இருந்துச்சே ஒரு குருப்பு?? எங்க அவனுக..//

//Aiadmk M Sakthivel Rajan

அம்மாவின் மரணத்திற்கு விசாரணை வேண்டும் என்றால் இரு அணியும் இணைந்து விசாரணை கமிஷன் வைப்போம்- தம்பிதுரை எம்பி !

# மானஸ்த்தய்ங்க அத பண்ணுங்க, அப்பல்லோவை விசாரிக்கிறதுக்கு முன்னாடி ஓபிஎஸ் ஐயும், டெல்லி எய்ம்ஸையும் விசாரிங்க.//

//சிவ சிவா

ஆட்சி கலைக்கப்பட வாய்ப்பேயில்லை,

மறு தேர்தல் வந்தால் தீபாவோ அல்லது ஐயா வைகோ அவர்களோ முதல்வராவார்கள் என்பது டில்லிக்கு தெரியும்

அந்த பயம் இருக்கட்டும்//

//Murali Munus

pullக்கும் pushக்கும் இருக்குற குழப்பம் பொட்டாட்டோவுக்கும் டொமேட்டோவுக்கும் வந்தால் என்னை போல நீங்களும் தமிழ் மீடியமாக இருக்கலாம்//

//Boopathy Murugesh

மோடி சைரன் வச்சுக்க கூடாதுன்னு சொன்னாதால கழட்டிட்டேன் - எடப்பாடி

அவரு கருப்பு பணம் வச்சுக்க கூடாதுன்னு 6 மாசமா கத்திட்டுருக்காரு..//

//Bharani Dharan

மாட்டிக்கிட்ட உடனே டக் டக்குன்னு டொமைன் மாத்துறதுல முதலிடம் Tamil Rockers! இரண்டாம் இடம் அஇஅதிமுக அடிமைகள்.//

//En Avan

பெண்கள் பயமில்லாம போற வர்ற பசங்களை பார்த்து சுதந்திரமா கண்ணடிக்கிறது facebookல மட்டும் தான் ...//

//Partha Sarathi

தனக்குக் கீழ் பணிபுரிபவர் கைகளில் விலங்குகளைப் பூட்டிவிட்டு அவர்கள் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்று எதிர்பார்த்தீர்கள் என்றால் அது வடிகட்டிய முட்டாள்தனம்......//

//பிச்சு மணி

அம்மா எங்கே வா வா

ஆசை பதவி தா தா

இரட்டைஇலை சின்னம் போட்டு

தினகரனை தூர ஒட்டு//

//Sakthi Saravanan

"காரிதுப்பினால் துடைத்துக்கொள்வேன் - நாஞ்சில் சம்பத்" இவரு ஒருத்தர் தான் யா நியாயமா பேசறாரு.//

//Indhuja Vengat

ஸ்கூல் லீவ் விட்டா முன்னர் டிவி ரிமோட்தான் கையில் கிடைக்காது.இப்போது மொபைலும் கிடைக்க மாட்டேங்குது//

//Bala Pvr

எல்லாத்துக்கும் ரிமோட் கண்டு பிடிச்ச நாம், சூரியனுக்கு ஒரு ரிமோட் கண்டு பிடிச்சிருக்கலாம்,

கண்டிபிடிச்சிருந்தா சூரியன் செட்டிங்ஸ் போய் பிரைட்னெஸ் குறைச்சி வைக்கலாம்.//

//Yesudass Mass

என்னை போன்ற ஏழைகளே..

வீட்டுல A/C இல்லை ன்னு கவலைப் படாதீங்க..

ஈரத்துண்டை உடம்புல போத்திகிட்டு படுங்க ப்ரண்ட்ஸ் அதான் இயற்கை A/C..//

//Partha Sarathi

பேஸ்புக் ல தம்பீ தம்பீ னு கூப்புடுறாய்ங்க ஆனா யாரும் பொண்ணு தரதான் ரெடியா இல்ல.....//

//Nanjil Aravintha

ஓபிஎஸ்ஸுடன் சேர வேண்டிய நிலைமை ஏற்பட்டால் தற்கொலை செய்துகொள்வேன்.... - நா.ச.

உன்கிட்ட ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு... பினிசிங் சரியில்லையேப்பா....//

//Saba Sabastin Sabas

காரில் இருந்து சைரனை அகற்றினார் முதல்வர் பழனிச்சாமி-செய்தி

அப்டியே அந்த சனியன்களையும் அகற்றிருங்க பாஸு//

//சுபா வள்ளி

ஒரு ஊர்ல

ஒரு தோட்டம் இருந்துச்சாம்

அங்க நிறையக் குரங்குகள் இருந்துச்சாம்...

ரொம்ப நாளா அங்கயே இருந்ததால

தோட்டக்காரனும் குரங்குகளும் பிரண்டாயிட்டாங்களாம்

தோட்டக்காரன் செய்யுற வேலைகளை

பார்த்துப் பார்த்து குரங்குகளும் அதைச் செய்து விளையாடுமாம்...

ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்துச்சாம்.

குரங்குகளை கூப்ட்டு விஷயத்தைச் சொன்னானாம்..

குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், ஒரு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊத்தணும்னு தெரியலயாம்...

''அது ஒண்ணும் பெரிய பிரச்னயில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க'' என்று யோசனை சொன்னானாம்...

வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு பயங்கர ஷாக்காம்.. அத்தனை செடிகளும் பிடுங்கி காஞ்சு போய்ருந்துச்சாம்

''என்னாச்சு?'' னு தோட்டக்காரன் கேட்டதுக்கு

''வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்க்கிறக்காக, செடியெல்லாம் பிடுங்கினோம்'' னு

சொல்லுச்சாம் அந்த குரங்குகள்.

தகுதியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுத்தால், விளைவு மோசமா இப்டிதான் இருக்கும்...

இது மாதிரி தான் இது மாதிரி தான்... இப்ப//

-லாக் ஆஃப்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon