மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

பன்னீரின் நிர்பந்தத்தால் சசிகலா குடும்பத்தை ஒதுக்கவில்லை:ஜெயக்குமார்

பன்னீரின் நிர்பந்தத்தால் சசிகலா குடும்பத்தை ஒதுக்கவில்லை:ஜெயக்குமார்

பன்னீர்செல்வத்தின் நிர்பந்தத்தால் சசிகலா குடும்பத்தை ஒதுக்க முடிவு செய்யவில்லை என, தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 18ஆம் தேதி அமைச்சர்கள் நடத்திய ஆலோசனைப்படி சசிகலா, தினகரன் மற்றும் அவருடைய குடும்பத்தை கட்சியை விட்டு ஒதுக்கிவைக்க முடிவுசெய்துள்ளதாக அறிவித்தனர். இதை வரவேற்றுப் பேசிய பன்னீர்செல்வம், 'எங்களுடைய தர்மயுத்தத்துக்கு கிடைத்த முதல் வெற்றி இது' என்று குறிப்பிட்டார். இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், ஏப்ரல் 20ஆம் தேதி (இன்று) தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நிதியமைச்சர் ஜெயக்குமார், 'பன்னீர்செல்வத்தின் நிர்பந்தத்தால் சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு ஒதுக்க முடிவு செய்யவில்லை. கட்சியின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு அனைத்து அமைச்சர்களும், நிர்வாகிகளும் ஒன்றுகூடி,பொதுமக்கள், தொண்டர்களின் விருப்பபடி எடுக்கப்பட்ட முடிவுதான் இது. விட்டால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வெற்றிகே நான்தான் காரணம்' என்று பன்னீர் கூறுவார். மேலும் இரு அணிகளும் இணைய பேச்சுவார்த்தை நடத்துவதில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை' என்றும் தெரிவித்தார்.

. இதேநேரத்தில்,சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள பன்னீர்செல்வம் வீட்டில், அவர்கள் அணி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், இரு அணிகளும் இணைவது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon