மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

ஏடிஎம் : தீராத பணத் தட்டுப்பாடு!

ஏடிஎம் : தீராத பணத் தட்டுப்பாடு!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளான 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மதிப்பழிப்பு செய்யப்படுவதாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாட்டால் ஏடிஎம்-களில் போதிய பணம் இருப்பு இல்லாமல் போனது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். தற்போது 5 மாதங்களாகியும் நாடு முழுவதும் உள்ள ஏடிஎம்-களில் பணத் தட்டுப்பாடு பிரச்னை இன்னமும் முழுவதுமாக தீரவில்லை என்று சிட்டிசன் என்கேஜ்மெண்ட் ஃபிளாட்பார்ம் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் உள்ள 8700 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்த ஆய்வில் 11 நகரங்களில், ஏடிஎம்-களில் பணத் தட்டுப்பாடு பிரச்னை இன்னமும் அதிகமாக இருப்பதாகக் கூறுகிறது. ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய நகரங்களில்தான் பணத் தட்டுப்பாடு பிரச்னை அதிகளவில் இருப்பதாக மக்கள் கருத்து கூறியிருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

அதிகபட்சமாக, ஹைதராபாத்தில் 83 சதவிகித மக்கள் பணத் தட்டுப்பாடு பிரச்னை இன்னமும் தீரவில்லை என்று கூறியுள்ளனர். இதேபோல, புனேவிலும் 69 சதவிகித மக்கள் பணத் தட்டுப்பாடு பிரச்னை இன்னமும் தீரவில்லை என்றே கூறியுள்ளனர். டெல்லியில் மட்டும்தான் குறைந்த அளவில் 11 சதவிகித பேர் மட்டுமே பணத் தட்டுப்பாடு தீரவில்லை என்று கருத்து கூறியுள்ளனர்.

ஏப்ரல் 13 - 16 வரையிலான தினங்களில் நடந்த ஆய்வில், 43 சதவிகித மக்கள் பணத் தட்டுப்பாடு உள்ளதாக தங்கள் கருத்துகளைக் கூறினர். இதற்குமுன், ஏப்ரல் 5-8 நடந்த ஆய்வில் 36 சதவிகித மக்கள் பணத் தட்டுப்பாடு உள்ளதாக கருத்து கூறியிருந்தனர். இதனால் பணத் தட்டுப்பாடு மீண்டும் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon