மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

நயன்தாரா வழியில் திரிஷா!

நயன்தாரா வழியில் திரிஷா!

சினிமாவில் 10 வருடங்களை தாண்டியும் இன்னும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா. அதே போல நயன்தாராவும் பத்து வருடங்களை தாண்டியும் இன்னும் நிலையாக மார்க்கெட்டை வைத்திருக்கிறார். நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துவந்த திரிஷா, தற்போது நயன்தாரா வழியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். நயன்தாரா ஹீரோவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை சமீபமாக தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா நடித்து கோபி நயினார் இயக்கியிருக்கும் 'அறம்' படத்துக்கு மிக பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

அவரை பின்பற்றிய திரிஷாவும் 'மோகினி' ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை-2’ ஆகிய படங்களில் நடித்து வந்தார். இந்த மூன்று படங்களின் படப்பிடிப்பையும் தற்போது திரிஷா முடித்துவிட்டார். இதற்காக இப்படங்களின் இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக திரிஷா நடிப்பில் வெளிவந்த சில படங்கள் தோல்வியை சந்தித்தன. எனவே, வெற்றிக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் திரிஷாவும் இருக்கிறார். இந்த மூன்று படங்களும் திரிஷாவின் சினிமா பயணத்திற்கு பெரிய தூண்டுகோலாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon