மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

வேலையில் திருப்திகொள்ளும் இந்தியர்கள்!

வேலையில் திருப்திகொள்ளும் இந்தியர்கள்!

62 சதவிகித இந்தியர்கள் தங்களுடைய வேலை நிலையில் திருப்தி கொள்வதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

‘தி மைக்கேல் பேஜ்’ நிறுவனம், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வேலை நம்பிக்கை குறியீடு குறித்து ஆய்வை ஒன்றை நடத்தியது. இதில், இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களான டெல்லி, பெங்களூரு, சென்னை, மும்பை ஆகிய நகரங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த ஆய்வில் மக்களுக்கு தங்கள் வேலையில் உள்ள திருப்தி குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வு இந்தியாவில் 650 தொழிலிலாளர்களிடமும், மொத்தமாக ஆசிய, பசிபிக் பகுதிகளில் சுமார் 4,700 தொழிலிளார்களிடமும் நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் ஆசிய, பசிபிக் பகுதியில் வாழும் 53 சதவிகித பணியாளர்களில் 63 சதவிகித இந்தியப் பணியாளர்கள் தங்கள் பணி நிலைகளில் மிகவும் திருப்திகொள்வதாக தெரிவித்துள்ளனர். இதேபோல கடந்த ஆண்டிலும் இதே காலாண்டில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஆய்வில் 48 சதவிகித மக்கள் மேலும் தங்கள் திறனை வளர்த்துக்கொள்ள விரும்புவதாகவும், 39 சதவிகித மக்கள் தங்கள் வாழ்விற்கும்,தொழிலிற்குமான சமநிலைக்கு ஏங்குவதாகவும் தெரிவித்துள்ளனர். மற்றும் 34 சதவிகித மக்கள் வருமானத்தை ஒரு முக்கியக் காரணியாக கருதுவதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தும் முயற்சிகள் மூலம் பொருளாதாரத்தை விரைவுபடுத்த இந்திய அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. போட்டிமிக்க சந்தையில் திறமையான பணியாளர்களுக்கான தேவை அதிகரித்துவருவதால், பணியாளர்கள் தங்களுடைய திறமையை மேலும் மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டியுள்ளதாக மைக்கேல் பேஜ் நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குநர் நிக்கோலஸ் டியூமோலின் தெரிவித்தார்

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon