மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

ஆளுநருடன் தம்பிதுரை, ஜெயக்குமார் சந்திப்பு!

ஆளுநருடன் தம்பிதுரை, ஜெயக்குமார் சந்திப்பு!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவுடன் மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, நிதியமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அதிமுக-விலிருந்து சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கிவிட்டு பன்னீர்செல்வம் அணியினரை இணைக்கும் நடவடிக்கைகளில் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஏப்ரல் 20ஆம் தேதி காலை 11 மணியளவில் கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவை, நிதியமைச்சர் ஜெயக்குமார் சந்தித்துப் பேசினார். பின்னர் பேசிய ஜெயக்குமார், 'இந்தச் சந்திப்பின்போது, மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியை நிரப்புவதற்கான நேர்காணல் மட்டுமே நடத்தப்பட்டதாகக்' கூறினார்.

இதையடுத்து, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் ஆளுநரை சந்தித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, ‘ஆளுநர் என்னுடைய நண்பர். அவரை நீண்டகாலமாக சந்திக்க நினைத்தேன். ஆனால் தற்போதுதான் நேரம் கிடைத்தது. சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை. இது நட்புரீதியான சந்திப்பு மட்டுமே' என்று தெரிவித்தார்.

இரு அணிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடந்துவரும் இவ்வேளையில், ஆளுநருடன் அமைச்சர் ஜெயக்குமார், தம்பிதுரை ஆகியோரின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon