மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

சிலம்பம் சுற்றும் சமந்தா!

சிலம்பம் சுற்றும் சமந்தா!

சமந்தாவுக்கும் நடிகர் நாக சைதன்யாவுக்கும் இந்த வருடத்தில் திருமணம் நடக்கவிருக்கிறது. இதனால், அதிகமான படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளாமல், இதுவரை ஒத்துக்கொண்ட படங்களில் நடித்துக் கொடுத்துவிடுவது என்று முடிவு செய்து, அந்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வரிசையில், விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படம், பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம், சாவித்ரி வாழ்க்கை வரலாற்று படம், விஷாலுடன் 'இரும்பு திரை', விஜய் சேதுபதியுடன் 'அநீதி கதைகள்', இதுதவிர இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

இடைவிடாது படப்பிடிப்புக்கு இடையிலும், தற்போது சிலம்பமும் அவர் கற்றுத் தேர்ந்துள்ளார். இவர் சிலம்பம் சுற்றுவதுபோல் ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவர் சிலம்பை சுற்றுவதை பார்த்தால் முறையாக கற்றுக்கொண்டவரால் மட்டுமே இவ்வளவு சிறப்பாக சுற்றமுடியும் என்பது நன்றாக தெரிகிறது. சமந்தா நடிக்கும் படம் ஒன்றுக்காக தான் சிலம்பம் கற்றுக்கொண்டார் என்று பேச்சு அடிபடுகிறது.

சமந்தா சிலம்பம் சுற்றும் வீடியோ

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon