மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

பொதுமக்கள் எங்களை குற்றவாளியாகப் பார்த்தனர்:அமைச்சர் வீரமணி

பொதுமக்கள் எங்களை குற்றவாளியாகப் பார்த்தனர்:அமைச்சர் வீரமணி

சசிகலா அணியில் இருந்ததால் பொதுமக்கள் அனைவரும் எங்களை குற்றவாளியாகப் பார்த்தனர் என்று அமைச்சர் வீரமணி தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி இரவு முதல்வர் பழனிசாமி வீட்டில் நடைபெற்ற ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 'சசிகலா, தினகரன் மற்றும் அவர்கள் சார்ந்த குடும்பத்தை ஒதுக்கிவைக்க முடிவுசெய்துள்ளதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, தற்போது அதிமுக-வின் இரு அணிகளும் இணையும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில், ஏப்ரல் 19ஆம் தேதி இரவு வேலூரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி, 'ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியும், ஆட்சியும் பல சிக்கல்களை சந்தித்தது. தொகுதி மக்களையும், கட்சித் தொண்டர்களையும் எப்படிப் பார்ப்பது என இருந்தேன். அவர்கள் அனைவரும் என்னை ஒரு குற்றவாளியாகவே பார்த்தனர். சுப, துக்க நிகழ்வுகளுக்குக்கூட என்னை யாரும் அழைக்கவில்லை. நாங்கள் அழைத்தும் எங்களை தொண்டர்கள் சந்திக்க மறுத்தார்கள். சசிகலா நடத்திய நாடகம் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் நன்றாகவே தெரியும். நான் அவர்களிடமே எங்கள் பகுதியில் உங்களுக்கு ஆதராவாக யாருமில்லை என்று தைரியமாகக் கூறினேன். அமைச்சர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்தக் குடும்பத்தை அரசியலிலிருந்து விலக்க வேண்டுமென முடிவுசெய்து தற்போது அவர்களை விரட்டியுள்ளோம்.

மத்திய அரசு அதிமுக அரசை கலைக்க முயற்சி செய்தது. ஆனால் அதிமுக-வை யாராலும் அழிக்க முடியாது. ஒரு குடும்பத்துக்காக நாங்கள் ஆட்சியை இழக்க விரும்பவில்லை. எனவே, அவர்களை ஒதுக்கிவைத்தோம். இனி, கட்சியை வழிநடத்த 10பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இனிவரும் காலங்களில் அவர்களே அதிமுக-வை வழிநடத்துவார்கள். கண்டிப்பாக மீண்டும் இரட்டை இலைச் சின்னத்தை மீட்போம்’ என்று கூறினார்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon