மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

உளவு பார்க்கும் ஃப்ளுடூத் ஹெட்போன்!

உளவு பார்க்கும் ஃப்ளுடூத் ஹெட்போன்!

Privacy என்ற ஒன்றுக்காகவே பெரும்பாலும் அனைவரும் ஹெட்போன்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அந்த ஹெட்போன்கள் மூலம் தகவல்கள் திருடப்படுகிறது என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்காகோ பகுதியைச் சேர்ந்த கெய்ல் ஜேக் பிரபல ஹெட்போன் தயாரிக்கும் நிறுவனமான bose நிறுவனத்தின் மீது வழக்கு தொடந்துள்ளார். அதில் bose நிறுவனத்தின் ஃப்ளுடூத் ஹெட்போன்களைப் பயன்படுத்தும் பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாகவும் அதனால் மக்கள் அவர்களின் சுதந்திரத்தை இழக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். bose நிறுவனத்தின் வயர்லஸ் ஃப்ளுடூத் ஹெட்போன்கள் பயன்படுத்தும் நபர்கள் அவர்களின் மொபைல்களுடன் கனெக்ட் செய்ய வேண்டுமெனில், அதற்கு ஒரு அப்ளிகேஷனை பயன்படுத்த வேண்டும். அந்த அப்ளிகேசன் மூலம்தான் தகவல்கள் திருடப்படுவதாகவும், அவற்றை வியாபாரமாக்கிவருவதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.

மக்கள் சரியாக சுதந்திரம் பற்றிய நிபந்தனைகளைப் படிக்காததும் இதற்கான ஒரு காரணமாக கூறுகிறார் கெய்ல் ஜேக். இதேபோல் சமீபத்தில், ஆன்லைனுடன் கனெக்ட் செய்து பயன்படுத்தும் பொம்மைகள் மூலம் தகவல்கள் திருடப்படுவதாக ஐரோப்பாவில் வழக்கு தொடரப்பட்டு, அந்த பொம்மைகள் விற்பனைக்கு தடைசெய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தகவல்களால் தொழில்நுட்ப வளர்ச்சியால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் எனத் தெரியவருகிறது.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon