மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

சிவப்பு விளக்கை அகற்றிய தமிழக முதல்வர்!

சிவப்பு விளக்கை அகற்றிய தமிழக முதல்வர்!

இந்தியாவில் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சர்கள், முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர், குடிமைப் பணி அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் தங்களின் கார் கூரை மீது சிவப்பு விளக்கைப் பொருத்தி பயன்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில், வி.ஐ.பி.க்கள் சிவப்பு விளக்கு பொருத்திய வாகனத்தைப் பயன்படுத்த தற்போது மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில், ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற கேபினட் அமைச்சரவைக் கூட்டத்தில் சிவப்பு விளக்கு பொருத்திய வி.ஐ.பி. கார்கள் பயன்படுத்துவது குறித்து ஆலோசித்துள்ளனர். அமைச்சரவையின் ஆலோசனைக்குப் பிறகு, இந்தியாவில் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர், முதலமைச்சர் ஆகியோர் மட்டுமே சிவப்பு விளக்கு பொருத்திய கார்களில் பயணிக்க முடியும். மற்ற மத்திய அமைச்சர்களோ, குடிமைப் பணி அதிகாரிகளோ சிவப்பு விளக்கு பொருத்திய கார்களில் பயணிக்க தடை விதித்துள்ளனர். இந்த உத்தரவு, வருகிற மே 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது காரில் இருந்த சிவப்பு விளக்கை வியாழக்கிழமை (இன்று) காலை அகற்றினார். மேலும் மற்ற அமைச்சர்களும் காரில் உள்ள சுழல் விளக்கை விரைவில் அகற்றுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon