மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

ஹாட்ஸ்டார் : பத்து கோடி பதிவிறக்கம்!

ஹாட்ஸ்டார் : பத்து கோடி பதிவிறக்கம்!

ஸ்டார் இந்­தியா குழு­மத்தைச் சேர்ந்த ஹாட்ஸ்டார் நிறு­வனம், கிரிக்கெட் போட்டிகள், திரைப்படங்கள், டி.வி. தொடர்கள் மற்றும் பல்­வேறு பொழு­து­போக்கு நிகழ்ச்சிகளை தனது செயலி மூலம் வழங்கி வருகிறது.

ஹாட்ஸ்டார் செயலியை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் கூகுள் ப்லே ஸ்டோர் மூலமாகவும், ஐ-போன் வாடிக்கையாளர்கள் ஆப் ஸ்டோர் மூலமாகவும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

இந்தியாவில், கடந்த 2015ஆம் ஆண்டு ஹாட்ஸ்டார் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர்கள் மற்றும் இந்தியா விளையாடும் அனைத்து விளையாட்டுத் தொடர்களையும் தனது செயலி மூலம் நேரலையாக ஒளிபரப்பு செய்து அதிக வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து, இந்தியா முழுவதும் அதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தது.

இந்நிலையில், அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டே வருடங்களில் 10 கோடிப்பேர் ஹாட்ஸ்டார் செயலியை கூகுள் ப்லே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன்மூலம், கூகுள் ப்லே ஸ்டோரிலிருந்து 10 கோடி பதிவிறக்கம் செய்த முதல் இந்திய செயலி என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

மேலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட காலகட்டத்திலிருந்து இதுவரை கூகுள் ப்லே ஸ்டோர், ஆப் ஸ்டோர் என மற்ற ஆப் பதிவிறக்கும் தளங்களிலிருந்து இதுவரை மொத்தம் 20 கோடிப்பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாக ஹாட்ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon