மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

புதிய படத்தில் இஷாரா!

புதிய படத்தில் இஷாரா!

ஆதி மகாதேவிகள் திரைப்படத்திற்காக பத்து நாட்களில் தனது உடல் எடையைக் குறைத்துள்ளார் சதுரங்கக் வேட்டை இஷாரா நாயர். 'சதுரங்க வேட்டை' திரைப்படத்தில் சாந்தமான பெண்ணாக நடித்தவர் இஷாரா.நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன் இயக்கும் 'ஆதி மகாதேவிகள்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

'இயக்குநர் என்னைப் பார்த்ததும் பத்து நாட்களில் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று கூறினார். நானும் பத்து நாட்களில் என் உடல் எடையைக் குறைத்து அவர் முன் நின்றேன். அவருக்கு சர்பரைசாக இருந்தது. நான் இதுவரை நடித்திருந்த திரைப்படங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட கதாப்பாத்திரம் இந்த சுஜி கேரக்டர். படத்தின் ரிலீஸிற்காக காத்திருக்கிறேன்' எனத் தனது மென்மையான குரலில் கூறுகிறார் நடிகை இஷாரா நாயர்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon