மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

முழுநேர கவர்னர் நியமிக்க வேண்டும் : ஜி.கே.வாசன்

முழுநேர கவர்னர் நியமிக்க வேண்டும் : ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வியாழக்கிழமை (இன்று) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரு மாநிலத்துக்கு கவர்னரின் பணி என்பது மிக மிக அவசியமாகும். எந்த ஒரு மாநிலத்திலும் முழுநேர கவர்னர் இருக்க வேண்டும். அப்போதுதான் அம்மாநிலத்தின் நடவடிக்கைகள், செயல்பாடுகள் அனைத்தும் கவர்னரின் கட்டுப்பாட்டுக்குள் தாமதமின்றி சரியாகச் செயல்படும். எனவே, தமிழகத்தில் தற்போது நிலவும் சூழலுக்கு ஏற்றவாறு மத்திய அரசு இந்த முடிவை விரைந்து எடுக்க வேண்டும்.

மேலும் தமிழகத்தில் பல்வேறு முக்கியமான பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி இன்னும் நிரப்பப்படாமல் காலியாகவே இருக்கின்றன. எனவே, அதற்கான தகுதியில் இருப்பவர்களுக்கு பதவி நியமனம் செய்துவைக்க வேண்டும். அதற்கான அதிகாரம் கவர்னருக்கு உள்ளது. எனவே, தமிழகத்தில் கல்வித்துறை, அரசியல் சூழல் போன்றவற்றை மத்திய அரசு கவனத்தில் கொண்டு தமிழகத்துக்கு முழுநேர கவர்னரை இன்னும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நியமனம் செய்ய முன்வர வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று, தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon