மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

எழுத்தாளர்களின் கையெழுத்துக்களை இழந்து விட்டேன்:கமல் கவலை

எழுத்தாளர்களின் கையெழுத்துக்களை இழந்து விட்டேன்:கமல் கவலை

சென்னை கிழக்கு கடற்கரைச்சாலையில் அமைந்துள்ள நடிகர் கமல்ஹாசனின் வீட்டில் ஏப்ரல் 8 ஆம் தேதி திடீர் தீ விபத்து ஏற்பட்டது.. வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்த கமலை அவரது உதவியாளர்கள் பத்திரமாக மீட்டு கீழே அழைத்து வந்தார்கள். இந்த சம்பவத்தால் கமல் சேகரித்து வைத்திருந்த பெரும்பாலான புத்தகங்கள் தீக்கிரையானதாகவும் வேறு யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லையென தகவல்கள் வெளியானது.

சம்பவம் குறித்து அவரது மேலாளர் மூர்த்தி கூறும் போது, ‘ஈ.சி.ஆர். ரோட்டில் உள்ள கமல் வீட்டில் நள்ளிரவு 12.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. மூன்றாவது மாடியிலிருந்த பிரிட்ஜில் ஏற்பட்ட தீ பக்கத்து அறையில் இருந்த ஏசி ரூமிற்கும் பரவி விட்டது, இதனால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் இல்லை கமல் உட்பட அனைவரும் நலமாக உள்ளனர்’ என்று தெரிவித்தார். இந்நிலையில் தீவிபத்தில் தனது வீட்டின் நூலகத்தில் இருந்த 20 சதவிகித புத்தகங்கள் எரிந்து போய்விட்டதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அதில் மறைந்த ஏராளமான எழுத்தாளர்களின் கையெழுத்துக்கள் இடம்பெற்றிருந்ததாகவும், இனி அவற்றை பணம் கொடுத்து கூட வாங்க முடியாது என்று சமீபத்தில் அளித்துள்ள சிறு பேட்டியில் வேதனையுடன் கூறியுள்ளார். தன்னுடைய புதிய வீடு விரைவில் தயாராகி விடும் என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு அருகிலேயே தனது புரொடக்‌ஷன் ஸ்டூடியோவும் அமைவதாகவும் தெரிவித்துள்ளார். அனைத்தும் கட்டி முடிக்கப்பட்ட பின்னர், ஆண்டிற்கு 600 மணி நேரம் மிச்சமாகும் என்றும், அதனை பயனுள்ள வழியில் கழிக்க முற்படுவேன் என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon