மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

உத்தரப்பிரதேசத்தில் மது விற்க தடை: யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேசத்தில் மது விற்க தடை: யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வழிபாட்டுத்தலங்கள் அருகே மதுக்கடைகள் செயல்படக் கூடாது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச முதல்வராக பதவியேற்ற யோகி ஆதித்யநாத், புதுப்புது அதிரடி உத்தரவுகளை வெளியிட்டு வருகிறார். இதன்படி, தற்போது அம்மாநிலம் முழுவதும் உள்ள வழிபாட்டுத்தலங்கள் அருகே செயல்படும் மதுக்கடைகளை அகற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அனைத்துவிதமான வழிபாட்டுத்தலங்கள் அருகேயும் மதுக்கடைகள் இருக்கக்கூடாது என்றும், எதிர்காலத்திலும் யாரும் அதற்கு அனுமதி தரக்கூடாது என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, உத்தரப்பிரதேசம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, அவரின் இந்த உத்தரவுக்கு பல்வேறு மதத் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon