மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

ஆளுநர் நியமனத்தில் எதற்கு தயக்கம்? - கி.வீரமணி

ஆளுநர் நியமனத்தில் எதற்கு தயக்கம்? - கி.வீரமணி

தமிழகத்துக்கென தனியாக ஆளுநரை நியமனம் செய்வதில் மத்திய அரசு எதற்கு தயக்கம் காட்டுகிறதென, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக ஆளுநர் நியமனம் தொடர்பாக நேற்று ஏப்ரல் 19ஆம் தேதி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கடந்த ஏழு மாதங்களாக தமிழகத்துக்கென தனியாக ஆளுநர் இல்லை. மகாராஷ்டிர மாநில ஆளுநராகச் செயல்படும் வித்யாசாகர் ராவ் தமிழகத்துக்கும் பொறுப்பு ஆளுநராக செயல்பட்டு வருகிறார். மகாராஷ்டிரமும் தமிழகமும் மிகப்பெரிய மாநிலங்களாகும்.

இந்நிலையில், தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநர் தேவை என்று தொடரப்பட்ட வழக்கில், தமிழகத்தில் தற்போது இருக்கும் ஆளுநரே நிரந்தரமானவர்தான் என மத்திய அரசின் வழக்கறிஞர் கூறியுள்ளார். தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் தனியாக ஆளுநர் இருந்தால்தான் இங்கு ஏற்படுகிற பல குழப்பங்களுக்குத் தீர்வு காண முடியும். தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுக மட்டுமன்றி, அவசர சூழ்நிலை என்றால் ஆளுநரை மும்பை சென்றா சந்திப்பது? இது நடைமுறைக்கு சாத்தியமாகாது. கூடுதல் பொறுப்பு என்பது நிரந்தர ஆளுநர் நியமனமாகக் கருத முடியாது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஒருவரைத்தான் ஆளுநராக நியமிக்கப்போகிறார்கள். அதைச் செய்வதற்குக்கூட மத்திய அரசுக்கு என்ன தயக்கம் என்பது தெரியவில்லை” என்று அதில் கூறியுள்ளார்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon