மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

டி.ஜி.பி. கனவு பலிக்குமா? கவலையில் ஜார்ஜ்!

டி.ஜி.பி. கனவு பலிக்குமா? கவலையில் ஜார்ஜ்!

தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. பதவிக்கு முன்னாள் சென்னை கமிஷனர் ஜார்ஜும், புட்செல் டி.ஜி.பி-யாக இருக்கும் ராதாகிருஷ்ணனும்தான் கடுமையான போட்டியில் இருந்து வந்தார்கள். இந்நிலையில், கார்டனுக்கு விசுவாசமாக இருந்த ஜார்ஜ், முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தின் செல்போன் அழைப்பைத் துண்டித்து அவமானப்படுத்தியதைத் தொடர்ந்து தலைமைச் செயலர், உள்துறைச் செயலரை அழைத்து, ஜார்ஜை மாற்றம் செய்யும்படி கூறியதும் அதுகுறித்து, ஆளுநரிடம் ஓ.பி.எஸ். தெரிவித்தது பற்றி நமது மின்னம்பலம்.காம் மொபைல் பத்திரிகையில் ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம்.

தற்போது மீண்டும் சுழல் விளக்கு காரில் ஓ.பி.எஸ். தலைமைச் செயலகத்துக்கு வந்துவிட்டால், தனது டி.ஜி.பி. கனவுகள், கானல் நீராகிப் போய்விடுமோ என்ற கவலையில் உள்ளாராம் ஜார்ஜ். அதுமட்டுமன்றி, ஜார்ஜ் போன்ற பல போலீஸ் அதிகாரிகளும் ஓ.பி.எஸ். ரீ-என்ட்ரியால் பெரும் கவலையடைந்துள்ளார்களாம். நடுநிலையாக இருக்கும் போலீஸ் அதிகாரிகள் பன்னீர்செல்வம் வருகையால் மகிழ்ச்சியில் இருப்பதைக் காண முடிகிறது.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon