மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

குன்னூர்: தேயிலை விற்பனை கடும் சரிவு!

குன்னூர்: தேயிலை விற்பனை கடும் சரிவு!

குன்னூர் தேயிலை வர்த்தகர் அமைப்பின் மூலம், விற்பனை எண் 15இல் நடைபெற்ற ஏலத்தில், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.11.32 லட்சம் அளவிலான தேயிலையில் 29 சதவிகித தேயிலை விற்பனையாகாமல் தேங்கியுள்ளது.

தேயிலையின் தோராய விலை கிலோ ஒன்றுக்கு ரூ.105 ஆகச் சரிந்தது. இதுவே இந்த ஆண்டில் குறைந்தபட்ச விலையாகும். தேயிலைக்கு ஏற்பட்ட தேவை குறைபாடு காரணமாக இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சி.டி.சி. சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்ட மொத்த தேயிலையையும் விஷால் மார்க்கெட்டிங் நிறுவனம் கிலோ ஒன்றுக்கு ரூ.246-க்கு வாங்கியது. அதே போல தரோமா எஸ்டேட்டில் ஏலத்துக்கு வந்த தேயிலையை தாமஸ் அண்ட் கோ நிறுவனம் மொத்தமாகக் கிலோ ஒன்றுக்கு ரூ.226 என்ற விலைக்கு வாங்கியது.

தமிழகத்தில், நீலகிரி மாவட்டத்தில் தேயிலை அதிகளவில் பயிரிடப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 150-க்கும் அதிகமான தேயிலை தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு கிட்டத்தட்ட 60,000 தொழிலாளர்கள் தேயிலைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இங்கு உற்பத்தியாகும் தேயிலை, தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon