மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

அமெரிக்காவுடன் இணையும் இங்கிலாந்து!

அமெரிக்காவுடன் இணையும் இங்கிலாந்து!

சிரியா விவகாரத்தில் தேவைப்பட்டால் அமெரிக்காவுடன் இணைவோம் என இங்கிலாந்து அவர்களுடைய தரப்பில் கூறியுள்ளது.

சிரியாவில் அதிபர் அசாதுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் தற்போது உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அண்மையில், சிரியாவில் ரசாயன தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகக் கூறி அமெரிக்கா, சிரியா மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதற்கு இங்கிலாந்து, ஃப்ரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில், சிரியா விவகாரத்தில் தேவைப்பட்டால் அமெரிக்காவுடன் இணைவோம் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து வெளியுறவுத் துறைச் செயலாளர் போரிஸ் ஜான்ஸன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘சிரியாவில் அசாத்தின் ஆட்சியானது அரக்கத்தனமானது. இதற்கு எதிராக அமெரிக்காவின் நடவடிக்கைகளில் தேவைப்பட்டால் இங்கிலாந்தும் இணையும்’ என அவர் கூறியுள்ளார். மேலும், ‘ஆறு ஆண்டுகளாக நடைபெற்றுவரும் போரை நிறுத்த ரஷ்யா தனது 'குருட்டுத்தனமான ஆதரவை' சிரியாவுக்கு அளிப்பதை நிறுத்த வேண்டும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon