மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

ஏப்ரல் 18: கிரிக்கெட்டின் சாதனை நாள்!

ஏப்ரல் 18: கிரிக்கெட்டின் சாதனை நாள்!

ஏப்ரல் 18ஆம் நாள் கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத நாளாக மாறியுள்ளது. காரணம், கடந்த 1986ஆம் ஆண்டு பாகிஸ்தான் வீரர் Javed Miandad ஆட்டத்தின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இந்திய அணியிடம் வெற்றி பெற செய்தார். அதேபோல் 1994ஆம் ஆண்டு வெஸ்ட் இந்தியன்ஸ் அணியின் சிறந்த வீரர் பிரைன் லாரா (Brian Lara) அதிக ரன்களைச் சேர்த்து புதிய சாதனை படைத்தார். அதுமட்டுமின்றி கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன்னர் மெக்குல்லம் இதேபோல் ஐ.பி.எல் தொடரில் 158 சேர்த்து அதிரடியாக டி-20 போட்டியினை தொடங்கி வைத்தார். அதேபோல் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் வெஸ்ட் இந்தியன்ஸ் அணியின் வீரர் கிரிஸ் கெயில் 3 ரன்கள் எடுத்திருந்தபோது 10,000 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். தொடர்ந்து விளையாடிய கெய்ல் 38 பந்தில் 5 பவுண்டரி, 7 சிக்சருடன் 77 ரன்கள் குவித்தார். இதுவரை அவர் மொத்தமாக 290 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவற்றில் 18 சதங்கள், 60 அரை சதங்கள் அடித்திருந்தார். இதில் 743 சிக்சர்களும், 764 பவுண்டரிகளும் அடங்கும்.

இவரது இந்தச் சாதனையை பாராட்டும் விதத்தில் யுனிவர்ஸ் பாஸ் (Universe Boss) என்ற அடைமொழி வழங்கப்பட்டது. அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் கிரிஸ் கெய்ல் முதலிடத்திலும், 7,596 ரன்களுடன் மெக்குல்லம் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். போட்டி முடிந்ததும் பேசிய கிரிஸ் கெய்ல் யுனிவர்ஸ் பாஸ் என்ற பெயர் மிகவும் பிடித்துள்ளது. ரசிகர்கள் கெய்ல் ஆட்டத்தைப் பார்க்க விரும்புகிறார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. 10,000 ரன்களைக் கடந்தது சிறப்பான தருணம் என தெரிவித்தார்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon