மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

வருவாய் சரிவில் இந்திய ஐ.டி. நிறுவனங்கள்!

வருவாய் சரிவில் இந்திய ஐ.டி. நிறுவனங்கள்!

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டி.சி.எஸ். வருவாய் வளர்ச்சியில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தைவிடப் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. கடந்த 2016-17 நிதியாண்டின் கடைசி காலாண்டுக்கான (ஜனவரி - மார்ச்) வருவாய் விவரங்களை வெளியிட்டிருந்த நாட்டின் இரண்டு மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டி.சி.எஸ். மற்றும் இன்ஃபோசிஸ் அறிக்கைகள் தொழில்நுட்பச் சேவைகளுக்கான தேவைச் சரிந்து வருவதை வெளிப்படுத்துவதாக இருந்தன. அடுத்த சில காலாண்டுகளிலும் இதே நிலை நீடிக்கும் என்று தொழில்நுட்பம் ஆராய்ச்சி நிறுவனமான கார்ட்னர் கணித்துள்ளது.

டி.சி.எஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை கடந்த 2016-17ஆம் நிதியாண்டில் அதன் வருவாய் வெறும் 6.2 சதவிகிதம் மட்டுமே அதிகரித்து 17,576 மில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. கடந்த 2010ஆம் நிதியாண்டில் டி.சி.எஸ் நிறுவனத்தின் வருவாய் வெறும் 5.4 சதவிகிதம் மட்டும் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து, கடந்த எழு ஆண்டுகளில் குறைவான வருவாய் வளர்ச்சியை நடப்பு நிதியாண்டில் பதிவு செய்துள்ளது டி.சி.எஸ் நிறுவனம்.

முன்னதாக, நடப்பு நிதியாண்டில் ஐ.டி துறையின் வளர்ச்சி 2.3 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்திருந்த கார்ட்னர், பின்னர் வளர்ச்சியின் அளவு 4.2 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்தது. ஐ.டி. சேவைகளுக்கான தேவை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருவதன் காரணத்தினாலேயே கருத்துக்கணிப்புகள் வேறுபடுவதற்கு முக்கிய காரணமாக உள்ளன. ட்ரம்பின் விசா கட்டுப்பாடுகள் மற்றும் இந்திய ரூபாய் மதிப்பும் அடுத்துவரும் காலாண்டுகளில் இந்த நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon