மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

உமா பாரதி பதவி விலகத் தேவையில்லை: மத்திய அமைச்சர்

உமா பாரதி பதவி விலகத் தேவையில்லை: மத்திய அமைச்சர்

‘உச்சநீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக, மத்திய அமைச்சர் உமா பாரதி பதவி விலகத் தேவையில்லை’ என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பாஜக மூத்தத் தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி உள்பட 13 பேரை சி.பி.ஐ. மீண்டும் விசாரிக்கும்படி உச்சநீதிமன்றம் நேற்று ஏப்ரல் 19ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. இந்நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி பதவி நீக்கம் செய்யப்படுவாரா? என்பது குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று ஏப்ரல் 19ஆம் தேதி டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த 1993ஆம் ஆண்டிலிருந்தே இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. அதுதான் தற்போதும் தொடர்கிறது. எனவே, உமா பாரதி பதவி விலகத் தேவையில்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலே பதவி விலக வேண்டும் என்றால் தற்போது காங்கிரஸில் முதலமைச்சர்களாக உள்ள அனைவரும் பதவி விலக வேண்டியதிருக்கும். உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் பாஜக-வுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது” என்று கூறினார்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon