மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

இன்றைய ஸ்பெஷல்: வெந்தய ரொட்டி

இன்றைய ஸ்பெஷல்: வெந்தய ரொட்டி

தேவையான பொருள்கள்

கோதுமை மாவு - 2 கப்

வெந்தய கீரை - 2 கட்டு

பொடி உப்பு - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

எண்ணைய் - 2 டேபிள் ஸ்பூன்

தனியத்தூள் - 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

சீரகம் [அ] ஓமம் - 1/2 டீஸ்பூன்

செய்முறை

எல்லா பொருள்களையும் ஒரு பாத்திரத்திலிட்டு கலக்கவும். தேவையான தண்ணீர் தெளித்து, மிருதுவான மாவாகப் பிசையவும். மெல்லிய மிருதுவான சப்பாத்திகளாகத் தயாரிக்கவும். சூடான தோசைக்கல்லின் மேலே சப்பாத்தியைப் போட்டு இருபுறமும் 1/2 டீஸ்பூன் எண்ணெய் விட்டுச் சுடவும். பிறகு முறுவலாக சப்பாத்தியைப் பரிமாறி மகிழவும்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon