மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

காஷ்மீர் விவகாரம்: மோடி ஆலோசனை!

காஷ்மீர் விவகாரம்: மோடி ஆலோசனை!

ஜம்மு-காஷ்மீர் நிலைமை குறித்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மூத்த மத்திய அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

காஷ்மீரில், ஶ்ரீநகர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் 09.04.2017 அன்று நடைபெற்றபோது அங்கு வன்முறை ஏற்பட்டது. அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்தப் போராட்டத்தில், போராட்டக்காரர்கள் கற்களை வீசினர். அதன்பின், பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அந்த துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் பலியானார்கள்.

இதன் காரணமாக, பிரிவினைவாதிகள் முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து, சுமார் ஒரு மாத காலமாக காஷ்மீரில் அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது.

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பிரிவினைவாத அமைப்புகளுக்கும் இடையை தொடர் சண்டை நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியுடன் காஷ்மீர் பிரச்னை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்களான அருண் ஜெட்லி, வெங்கய்யா நாயுடு, சுஷ்மா ஸ்வராஜ், ராஜ்நாத் சிங் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon